பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.
கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.
அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந் ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன்.இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.
சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது.படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, "ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்து விட்டதே," எனக் கூறினான்.
"போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்," எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான்.ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.
அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.
தம்பி செய்த மோசடியை பூதம் புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.
அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, "ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே..." என எண்ணி மனம் புழுங்கினான்.
எங்கள் இணையத்தளத்தை விட்டுச் செல்வதற்கு முன் இவற்றையும் பார்வையிடுங்கள்.உங்களுக்கு வாழ்க்கைக்கு தேவைப்படும் குட்டிக் கதைகளாக அமையும்.
- பறவை ஒரு குட்டிக் கதை
- குல்லா வியாபாரியும் குரங்குக் கூட்டமும்-குட்டிக் கதை
- அமைதி - ஒரு குட்டிக்கதை
- வாழ்க்கை ஒரு குட்டிக்கதை
- கடவுள் இருக்கும் இடம் ஒரு குட்டிக்கதை
- இரண்டு மரம்-குட்டிக்கதை
- கடவுள் ஒரு குட்டிக்கதை
- கர்மா பற்றிய ஒரு குட்டிக்கதை
- ஆசைக்கு அழிவில்லை என்பதற்கான ஒரு குட்டிக் கதை
- ஞானம் ஒரு குட்டிக் கதை
- எண்ணமே வாழ்க்கை-குட்டிக்கதை
- முரட்டுக்குதிரை-குட்டிக்கதை
- யார் அழகு..?
- ஒற்றுமையே பலம்
- கொக்கிற்கு எத்தனை கால்..?
- அதிசய மோதிரம்-குட்டிக் கதை
- பரிசும் ஊக்கமும்-குட்டிக் கதை
- தர்மம் தலை காக்கும்
- உழைப்பும் சோம்பலும்-குட்டிக் கதை
- புத்தியில்லாதவர்களின் வேலை-குட்டிக் கதை
Post a Comment