.

வோல்கா எழுதியுள்ள யசோதரை என்னும் நூல் புத்தரின் மனைவியான யசோதரையைப் பற்றியதாகும்.புத்தராக வாழ்வது சுலபம் ஆனால் புத்தரின் மனைவியாக வாழ்வதென்பது கடினமான வொன்று என்பதை அந்தக் காலகட்டங்களில் நீங்கள் வாழ்ந்தி ருந்தால் உணர்ந்திருப்பீர்கள்.ஏன் கடினமாவொன்று என்பதை நீங்கள் இப் புத்தகத்தை வாசிக்கும்போது அறிந்து கொள்வீர்கள்.புத்தரைப் பற்றி எவ்வளவோ எத்தனை யோ விடயங்கள் பேசப்பட்டிருந்தாலும் யசோதரையைப் பற்றி பேசியிருப்பது குறைவு அல்லது என்பதே உண்மை.இக் குறையைத் தீர்க்க இப்புத்தகம் நிச்சயம் உதவும். மறைக்கப்பட்ட வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்களி ற்கு ஏற்றது இப் புத்தகம்.

புத்தர் நள்ளிரவில் யசோதரையையும் பிறந்து ஐந்தே நாட்களான  மகன் ராகுலனையும் துறந்து நள்ளவிரவில் ஞானத்தைத் தேடி வீட்டை விட்டுச்  செல்கிறார்.அதன் பின்னர் யசோதரை அந்த வீட்டையும் அக்கம் பக்கத்து ஆட்களையும் கிராமத்து ஆட்களையும் தன்னுடைய அந்த சிறிய இராச்சிய மக்களையும் எவ்வாறு சமாளித்தாள் என்பது அறியப்படாமலேயே காணப்படுகிறது.அவ் வெற்றிடத்தை நிரப்பு கிறது இந் நூல்.ஆணாதிக்கம் கடுமையாக நிலவிய அக்கால கட்டத்தில் பெண்களை பொருட்டாக கூட மதிக்காத அவ்வேளையில் சாதாரண பெண்ணால் நிச்சயம் சமாளித்திருக்க முடியாது. உண் மையில் புத்தரை விட யசோதரை அதிகம் பேசப்பட வேண்டி யவளே ஏன் என்பதை இப்புத்தகம் சுட்டிக் காட்டுகிறது.

செல்வச் செழிப்போடு வாழ்ந்து வந்த சித்தார்த்தன் தன்னுடைய குடும்பத்தையும் சொத்துக்களையும் விட்டு விட்டு வெளியேறிய நேரத்தில் ஒரு சில நாட்களுக்கு முன்புதான் பிரசவித்திருந்த யசோதரை ஏன் அயர்ந்து ஏன் தூங்கிக் கொண்டிருந்தாள் என்பதை நாம் ஒருபோதும் யோசிக்காமல் போனது ஏன் என்று கேள்வி கேட்கிறது இந்நூல்.

இந்நூலில் வரலாற்று இடைவெளிகள் முழுமையாகவும் உக்கிர மாகவும் கற்பனை செய்யப்பட்டுள்ளன.யார் அநத இளம் பெண் யசோதரை..?உலகைப் பற்றி அவள் கொண்டிருந்த கண்ணோ ட்டத்தை எது செதுக்கி வைத்தது..?அவள் தன்னுடைய பதினாறாவது வயதில் சித்தார்த்தனை மணமுடித்தபோது தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கை விரைவில் பெரும் மாற்றத்திற்குள்ளாகும் என்பதை அறிந்திருந்தாளா..? வோல்காவின் இந்தப் பெண்ணியப் புத்தகத்தில் நாம் சந்திக்கிற யசோதரை கூரிய சிந்தனை கொண்டவளாகவும் இரக்கவுணர்வு கொண்டவளாகவும் எமக்குத் தென்படுகிறாள். ஆன்மீகத் தேடலில் ஆண்களிற்குச் சமமாக பெண்களும் பங்கு கொள்வதற்கு வழிகோல அவள் விரும்புகிறாள்.சித்தார்த்தன் புத்தராக மாறியதற்குப் பின்னாலிருந்த வலிமையான யசோதரை இந்நூலில் தென்படுகிறாள்.

இப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பெண்கள் சார்ந்த விடயங்கள் அக்காலத்தில் நிலவிய பெண்களுக்கெதிரான கடுமையான அடக்குமுறையை வெளிக் கொண்டு வருவதாகவுள்ளது.அவ் ஒடுக்கு முறை இன்று வரை தொடரத்தன் செய்கிறது.யசோதரை அவ் ஒடுக்கு முறையை எதிர்க்கத் தனியொருத்தியாக துணிகிறாள்.அதில் அவள் வெற்றி பெறாவிட்டாலும் ஆழ்நத அறிவும் சிந்தனையையும் கொண்டவளாகக் காணப்படுகிறாள்.

ஆண்களிற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவர்களை சரியாக வழிநடத்துவதன் மூலம் பெண்கள் அதிக ஞானம் கைவரப் பெறுகிறனர்.ஆனாலும் அவர்களினுடைய ஞானம் இவ்வுலகிற்குத் தெரிவதில்லை.அது அவர்களுடைய குடும்பத்தைத் தாண்டி வெளியே போகாதவாறு ஒடுக்கப்பட்டு விடுகிறது.தங்களுடைய பெண்களின் ஞானத்தால் வழிநடத்தப்படுவதை பெரும்பாலான ஆண்கள் விரும்புவதில்லை என்பதால்,சில பெண்கள் தங்களுடைய அறிவைத் தவறாகப் பயன்படுத்தி அந்த ஆண்களின் வாழ்க்கையை அவலமானதாக ஆக்கி விடுகிறனர் என்கிறார் நூலாசிரியர்.

சித்தார்த்தனின் காலத்தில் பெண்கள் மனிதப்பிறவிகளாக அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டிருந்ததற்கான காரணம் அவர்களால் சுவாசிக்க முடிந்தது என்பதாலும் அவர்களால் வேலை செய்ய முடிந்தது என்பதாலும்தான் என்கிறார் வோல்கா.மற்றபடி அவர்களும் வெறும் பொருட்கள் போலவே நடத்தப்பட்டனர்.ஆண்களால் கைவசப்படுத்த வேண்டிய விலையுயர்ந்த சொத்துக்கள் போலவே நடத்தப்பட்டனர்.சித்தார்தனும் கிட்டத்தட்ட அதே கண்ணோட்டத்து டனயே இருந்திருக்கிறார். யசோதரையை சந்திக்கும் வரை. அவள்தான் சித்தார்த்தனிற்கு பெண்களின் சுய மரியாதையையும் அவர்கள் தனியாகச் சிந்திக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்து ரைத்து பெண்கள் தொடர்பான அவனின் கண்ணோட்டத்தை மாற்றியமைத்திருக்கிறாள்.




யசோதரை துணிச்சலாக தந்தையிடம் தான் போட்டியில் வெற்றி கொள்ளப்பட வேண்டிய பரிசுப் பொருளோ அல்லது பிராந்தியமோ அல்ல எனக் கூறி தனக்குப்  பிடித்தவனுடனையே மணந்து கொண் டாள்.இது இக் காலத்தில் பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி காதலனை/காதலியை கழற்றி விடும் நபர்களிற்கு செருப்படியாக அமைகிறது என்பதை சுட்டிக் காட்டலாம். பெண்களிற்கு கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்த அக் காலகட் டத்தில் தன்னுடைய மனதிற்குப் பிடித்தவனையே மணந்து கொண்ட யசோதரையைப் பாராட்டியே தீர வேண்டும். கருத்துச் சுதந்திரம் பெருமளவு முன்னேறியுள்ள தற்போதைய கால கட்டத்தில் உப்புச் சப்பில்லாத காரணங்களைக் கூறி பிரிந்து செல்லும் காதல்கள் ஏராளம்.

அக் காலகட்டத்தில் பெண்கள் தங்கள் மனக் கதவுகளை மூடி வைத்து விட்டு வீட்டு வேலைகளை மட்டுமே கவனித்துக் கொண் டால் அவர்கள் மரியாதையோடு நடத்தப்படுகிறனர்.மனக் கதவுக ளை திறந்து விட்டால் அவர்களிற்கு பித்துப் பிடித்து விட்டதாக முடிவு செய்யப்பட்டு அவர்களுடைய குரல் வலுக் கட்டாயமாக ஒடுக்க ப்படுகிறது என்பதை யசோதரை அறிந்தே இருந்தாள். இவ்விடயத்தில் சித்தார்த்தனுக்கு அவளே வழிகாட்டியாக செயற்பட்டாள்.அதாவது பெண்கள் சுதந்திரமாகவும் அறிவார்ந்த விதத்திலும் சிந்திக்க கூடிய திறன் படைத்த அறிவார்ந்த மனிதப் பிறவிகள் என்பதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளவில்லை.பெண்கள் சொந்தக் கால்களில் நிற்பதற்கும் சொந்த மனங்களைக் கொண்டு சிந்திப்பதற்கும் ஆண்டுகள் எடுக்கலாம்.அறிவுப் பாதையை பெண்களுக்குத் திறந்து விடுங்கள் என்கிறாள் யசோதரை.இதுவே பின்னாட்களில் பெண்கள் புத்த மதத்தில் பிக்குனி களாக வர உதவி செய்தது என்பது நிச்சயமான உண்மையாகும்.

சித்தார்த்தன் அவளைப் பிரிந்த பிறகு யசோதரையும் பிக்கு னியாகவே மாறிவிடுகிறாள்.இது பலபேருக்குத் தெரியாத உண்மை யாகும்.மக்களிற்கு சேவை செய்வதற்காக அவள் அவ்வாறு மாறினாள் என்பதை விட அவள் முன்பிருந்தே ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டிருந்தாள்.புத்தர் ஞானம் பெற்று அவளுடைய ஊருக்கு வந்த போது அவள் அவரைச் சென்று பார்க்கவில்லை.அதாவது யசோத ரையும் புத்தரை கைவிட்டிருந்தாள்.பந்த பாசங்களை துறந்தி ருந்தாள்.அவள் அழக் கூட இல்லை.சித்தார்த்தன் பிரிந்த போதும் அழவில்லை.ஞானம் பெற்று மீண்டும் வந்த போதும் அழவில்லை அவள் ஒரு இலட்சிய மங்கையாகவே வாழ்ந்திருந்தாள்.சித்தார்த்தன் ஞானம் பெற்ற போது யசோதரையின் வாழ்வின் இலட்சியம் நிறை வேறியிருந்தது.அவள் அதற்காகத்தன் வாழ்ந்தாள். எதிர்பார்த்திருந் தாள் என்கிறார் வோல்கா.

மொத்தத்தில் யசோதரை ஒரு மறைக்கப்பட்ட கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பெண்ணின் வரலாறு.சித்தார்த்தனுக்குப் பின்னாலிருந்த பெண்ணின் கதை.புத்தர் பேசப்பட்டளவிற்கு யசோதரை பேசப்படாமலி ருப்பது துரதிஸ்டமே.ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதித்து விடுவாள் என்பதற்கு யசோதரை ஒரு சாட்சி. உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக வாசிப்போம்.


எங்கள் இணையத்தளத்தை விட்டுச் செல்வதற்கு முன் இவற்றையும் பார்வையிடுங்கள்.நீங்கள் வாசிக்காத புத்தகங்களாக இவை இருக்க கூடும்.

சேப்பியன்ஸ்

மஞ்சள் பிசாசு

21 ம்நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்

நகைச்சுவைக் கதைகள்

ஹோமோ டியஸ்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

புதுக்காட்டுப் பள்ளங்கள்

கௌரவன்

நாகரிகங்களின் மோதல்

டாலர் தேசம்

மனித குலம் நம்பிக்கையூட்டும் வரலாறு 

அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம்


யசோதரை புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.

You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post