இன்று எமது நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR Code என்பது அத்தியாவசியமானதாகிவிட்டது.QR Code இல்லையேல் யாரும் எரிபொருள் நிரப்ப முடியாது என்பதே உண்மையாகும்.அப்படியான QR Code என்றால் என்னவென்பதை இக்கட்டுரை ஆராய்கிறது.எம்மில் பலருக்கு எப்படி இயங்குகிறது என்பதைப் பற்றி அறியாதிருப்போம். அதை நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
QR Code என்பது Quick Responce Code என்பதன் சுருக்கமாகும்.இது தரவுகளை சேமித்து வைப்பதற்காக Floppy disk, CD, DVD,USB Drive, அல்லது Hard Drive என்பன போல அதே வகையில் உள்ள ஒரு சிறிய சேமிப்பு ஊடகம் அவ்வளவுதான்.
Bar Code 1 dimension (1D) இனாலானது.இதை முதல்முறையாக யூன் 1974 ம் ஆண்டு Wrigley'schewing gum எனப்படும் சுவிங்கத்தில் பயன்படுத்தினர். இதை நோர்மன் ஜோசப் வூட்லேண்ட் எனப்படும் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் கண்டுபிடித்தார்.Dimension (2D) இனாலானது QR Code இது 1994 ஆம் ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த பொறியியலாளர் Masahiro Hara இனால் Denso Wave மோட்டார் கம்பெனியில் உற்பத்தியின் போது அதிகமான மகிழுந்துப் பாகங்களை விரைவாக இனங்கண்டு கொள்ளலின் நடைமுறைச் சிக்கலைத் தீர்ப்பதற்காக முதலில் தயாரிக்கப்பட்டது.கானா உட்பட சில நாடுகள் தங்கள் பணத் தாள்களில் கூட அச்சிட்டு பயன்படுத்துகின்றார்கள்.
QR Codeஇன் பிரதானமான இருவகைகள் காணப்படுகின்றன. அவையாவன ஒன்று பதிவு செய்யப்பட்ட தகவலை மாற்ற முடியாத Static QR Code. மற்றையது பதிவு செய்யப்பட்ட தகவலை மாற்றக்கூடிய Dynamic QR Code உம் ஆகும்.
QR Code
ஒரு சிறியஉதாரணத்தை பார்ப்போம்.மாலைநேரங்களில் ஒரு பிர பலமான உணவகத்தில் அன்றைய விசேட உணவு என்ன என்பதை QR Code ஸ்கேன் செய்து மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கும்போது தங்கள் கையடக்கத் தொலைபேசியில் அன்றைய விசேட உணவின் புகைப்படத்தை விலையுடன் கூட பார்க்க முடியும் என்று வைப்போம். உணவகத்தினர் ஒவ்வொரு நாளும் தங்களுடைய விசேட உணவு வகைகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய QR Code மாற்ற வேண்டியிருக்கும்.ஆனால் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்காகவே Dynamic QR Code பிரசன்னம் ஆகியது.
இதேபோலவே ஒரு வணிக அட்டையில் ஒருவர் QR Code மூலம் தன்னுடைய தகவல்களை பொதிந்து வைத்திருக்கிறார் என வைப்போம்.இதை நாடளாவிய ரீதியில் பலருக்கும் வழங்குகின்றார். அவருடைய விபரம் சடுதியாக மாறுகிறது.இவ்வாறான சந்தர்ப்பத்தில் அத்தனை காடுகளிலும் எப்படி மாற்றுவது ? இந்தச் சிக்கலை கையாளவே Dynamic QR Code உருவானது.இதனால் Static QR Code போலல்லாது மேலும் பல நன்மைகளும் உள்ளது.
குறிப்பிட்ட அட்டையை எத்தனை தடவை Scan செய்து உள்ளார்கள், எந்த இருப்பிடம், நாடு, நகரம்,தெருவிலிருந்து Scan செய்துள்ளார்கள், Scan செய்தவர்களின் தொலைபேசி இன் வகை Android,Android B , அல்லது I Phone பயன்படுத்துபவர்களா? என்பன உட்பட பல்வேறுபட்ட தகவல்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.எனவேஒரு வியாபார நிறுவனத்தை நடத்துபவர் எந்தெந்த இடத்தில், எந்தெந்த விடயத்தில் அதிகமாக தான் கவனம் செலுத்தவேண்டும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.இதன் மூலம் வியாபாரத்தை மேம்படுத்த முடியும்.
சாதாரணமாக QR Code ஸ்கேனர் மூலம் எந்த எந்த தகவல்கள் அறியப்படு கின்றன? எந்த எந்த தகவல்கள் சேமிக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.பொதுவாக மனித கண்களுக்கு 3 சதுரங்கள் மற்றும் வெள்ளை மற்றும் கறுப்பு சதுரங்கள் ஆக காணப்படுகிறது QR Code.ஆனால் இதில் version இன் Performance, Format இன்Performance , Alingment Pattern, Timing Pattern பகுதிகள் உடன் சேமிக்கப்படும் தகவல் சேதம டைந்து விட்டால் அதைத் திருத்தும் பகுதியாக Error Correction Zone என்பனவும் காணப்படுகிறது. QR Code தகவல்களை numeric,alphanumeric, byte/binary, kanji எனும் வடிவங்களில் சேமித்து வைக்கிறது.QR Code இல் மொத்தமாக 40 version கள் உள்ளன.1 ஆவது version 152 bits அல்லது 41 இலக்கங்கள்,25 எழுத்துக்கள் இலக்க கலவை ,17 Binery அல்லது 10 Kanji எழுத்துக்களையும் 40ஆவது version எனில் 23,648 bits அல்லது 7089 இலக்கங்கள் , 4296 எழுத்துக்கள் இலக்க கலவை,2953 Binery அல்லது 1817Kanji எழுத்துக்களையும் சேமிக்கவல்லது.
QR Code ஐ உருவாக்க பல இலவச செயலிகள், இணையதளங்கள் உள்ளன ( உம்QR Tiger). QR Code ஐ ஸ்கேன் செய்யும் போது நீங்கள் என்ன செயற்பாட்டை செயற்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை வைத்து உங்களுடைய QR Code ஐ உருவாக்குவீர்கள்.உதாரணமாக பிரியமான வர்களுக்கு Have a good day எனப்படும் குறுந்தகவலை ஐ அவர்கள் QR Code ஐஸ்கேன் செய்த போது தெரிவிக்க வேண்டுமா? அதை செய்யலாம்.அதைப்போலவே QR Code ஐ Scan செய்யும்போது இணையதளம் ஒன்றை Open செய்தல், SMS அனுப்புதல்,மின்னஞ்சல் அனுப்புதல்,உணவக பட்டியல் தரவிறக்கம் செய்தல்,வணிக அட்டையில் உள்ள விபரங்களை காண்பித்தல். News Cast இற்கு செல்லல், விமர்சனங்களை செய்தல், சமூக வலைத்தளங்களிற்கு அதன் Profile களுக்கு மிக விரைவாக செல்லுதல், இடங்களை Scan செய்து அதை கூகிள் மேப்பில் பார்த்தால், வாங்கிய பொருட்களுக்கு பணத்தை செலுத்துதல். குறிப்பிடப்பட்டகட்டடத்தில் உங்கள் வருகையை உறுதிப்படுத்துதல் போன்றவற்றிற்கு QR Code பயன் படுத்தி மிக விரைவாக செய்து கொள்ளலாம்.
இந்தக் Code ஐ உங்களுக்கு விரும்பிய வெவ்வேறு நிறங்களில் சில உருவ மாற்றங்களுடன் செய்யலாம்.அத்துடன் கூட அதன் நடுவே சிறிய அழகிய உருவங்களையும் ( உ+ம் வணிக சின்னம்) பொறிக்கலாம்.இவ்வாறு செய்யினும் QR Code சரியாக வேலை செய்யும்.ஏனென்றால் இதிலுள்ள Error Correction பகுதியானது உருவத்தால் மறைக்கப்பட்ட பகுதியை தானாகவே உருவாக்கும். எனவே நாங்கள் எதிர்பார்த்தபடி குறிப்பிடப்பட்ட QR Code நடுவில் படம் இருந்தாலும்கூட இயங்கும்.இந்த வசதி கியூ.ஆர்கோட் இன் ஒரு பகுதி அழுக்கடைந்து இருத்தல் அல்லது சேதமடைந்து இருத்தல் ஆன சந்தர்ப்பத்திலும் கூட சரியாக வேலை செய்வதற்காக உருவாக்கப்பட்டஒன்றாகும்.
மனித கண்களால் QR Code ஐ வாசி த்து அதில் உள்ள தகவலை அறிந்து கொள்ள முடியுமா என்று கேட்டால் ஆம் என்பதே இதற்கு பதிலாக அமையும்.கியூ.ஆர் கோட்ஐ ஸ்கேனிங் செய்யும் போது அந்த தகவல் என்ன என்பதை அறிவது உண்மையில் நீங்கள் Scan செய்யும் கமரா அல்ல மாறாக குறிப்பிட்ட QR Code ஐ Decode செய்வது எவ்வாறு என்று ஒரு பொறியியலாளர் அல்லது பல பொறியியலாளர்களால் எழுதப்பட்ட Coding ஆகும் அல்லது Computer Program என அழைக்கலாம்.எனவே அதே வேலையை அந்த பொறியியலாளர் மனித கண்களால் செய்து முடிக்கலாம்.ஆனால் இதற்கு அதிகநேரம் எடுக்கும்.இன்னுமொரு உதாரணத்தையும் பார்ப்போம். மனிதனும் கணினியும் சதுரங்க விளையாட்டு விளையாடும் போது அங்கே கணினி விளையாடுவது கிடையாது. மாறாக அந்த மென்பொருளை உருவாக்கிய மென்பொருள் பொறியியலாளர் உடைய திறமையே குறிப்பிட்ட நபருக்கு எதிராக
விளையாடுவது ஆகும்.
QR Code ஐ பயன்படுத்தி எவ்வாறு வியாபாரத்தை மேம்படு த்துகின்றனர் என்பதை பார்க்கலாம்.இதில் சில அடிப்படையான விடயங்களை மட்டும் பார்ப்போம்.உண்மையில் ஒரு பொருளை வாங்குவது என்று கருதினால் அந்தப் பொருளுடைய Package ஐ சுற்றி பார்ப்பதுவே அதிகம் என்றே கூறலாம்.ஒரு வியாபார நிறுவனத்தில் வியாபார நிறுவனத்துக்கு நுழைவதற்கு முன், நுழை வாயிலில் அல்லது வெளியில் நின்றபடி Scan செய்வதற்கு உரிய வகையில் QR Code வைப்பார்கள். அவைகளிலிருந்து புரோமோஷன்ஸ் பிரமிப்பூட்டும் புதிய வெளியீடுகள் என்பனபற்றிய தகவல்களை Scan செய்து அறிந்து கொள்ள கூடியதாக இருப்பின்,அதன் பின்னர் குறிப்பிட்ட நபர்களை வியாபார நிறுவனத்துக்கு உள்ளே வரச் செய்ய உதவியாக இருக்கும். உள்ளே வந்ததன் பிற்பாடு பொருட்களின் பெரிய பரப்பிலான இந்த Packageஇல் மிகவும் சிறியதான QR Code களை பதிவுசெய்து அந்தப் பொருள் பற்றிய மேலதிக தகவல்களை வழங்குவார்கள்.
அதன் பின்னர் அவர்கள் பொருட்களை வாங்குகிறார்களோ இல்லையோ மீண்டும் அவர்களை வரவழைக்க சமாதானமாக அனுப்பிவைக்க Have a Good Day,Thanks for your Visit போன்ற வாசகங்களை
அவர்களுக்கு காண்பித்து அனுப்புகின்றனர்.கி கோட்ஐ பயன்படுத்தி வியாபாரம் மேம்படுத்தல் இதில்முதலில் QR Code களை எங்கு வைப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இரண்டாவது புள்ளிவிபர தகவல்படி QR Code ஐ அதிகமாக ஸ்கேன் செய்ய வைப்பது அவை எவ்வளவு அழகாக செய்யப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே அமைகிறது என்பதுவே.
Post a Comment