மெலின்டா கேட்ஸ் எழுதிய பெண்களை உயர்த்துவோம் சமுதாயத்தை உயர்த்துவோம் என்ற நூல் ஆண்,பெண் இருவரும் வாசிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.இரு பாலருக்கும் ஏற்றது இப்புத்தகம்.
எளிய மொழிநடையில் அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக எழுதியுள்ளார் மெலின்டா.இதில் அவர் தன்னுடைய சொந்த அனுபவ ங்களையே பெரும்பாலும் பகிர்ந்துள்ளார்.ஆபிரிக்க ஆசிய நாடுகளில் பில்&மெலின்டா அறக்கட்டளையின் மூலம் தனக்குக் கிடைத்த அனுபவ ங்களின் தொகுப்பு என்று இந்நூலைக் கூறலாம். பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் சமுதாய முன்னேற்றம் சாத்தியமில்லை என்பதை மெலின்டா நன்றாகவே அறிந்திருக்கிறார்.
சமூகத்தில் அரைவாசிப் பேரை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டு ஒரு சமூகமாக எப்படி முன்னேற முடியும் என்ற கேள்வியை முன் வைக்கிறார்.ஆசிய ஆபிரிக்க நாடுகளில் தான் சந்தித்த பெண்களின் கதைகளை இந் நூலில் விபரித்துள்ளார் மெலின்டா.அவை மகிழ்ச்சியான கதைகள் அல்ல.இன்னமும் இந்த உலகம் எவ்வளவு பிற் போக்குத்தனங்களில் மூழ்கியிருக்கிறது பெண்களை எப்படியெல்லாம் சமூகங்கள் நசுக்குகிறன என்பதை அக் கதைகள் உங்களுக்கு உணர வைக்கும்.இப்படியெல்லாம் சமூகங்கள் காணப்படுகின்றனவா என்று யோசிப்பீர்கள். உதார ணமாக பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு,குழந்தைத் திருமணம், பாலியல் அடிமைகளாக பெண்களை விற்றல் போன்ற அன்றாட நிகழ்வுகள் ஆபிரிக்க நாடுகளில் இன்றளவும் காணப்படுவதை மெலின்டா நேரடி விஜயங்களின் மூலம் அறிந்திருக்கிறார்இதனை இந் நூலில் வெளிப்படுத்துகிறார்.அதையும் தாண்டி சாதித்த பெண்களின் கதைகளும் இப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.அவை உங்களுக்கு உத்வேக மூட்டுபவையாக காணப்படும் அதையும் தாண்டி எவ்வாறு பெண்கள் சமுதாயத் தடைகளை உடைத்து வெளியே வரலாம் என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.
பால் பார்மர் கூறியது போல மெலின்டாவின் சொந்த அனுபவ ங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவங்களைக் கொண்ட பெண்கள் மற்றும் சிறுமியரின் குரல்களை இந் நூல் மேலோங்கி ஒலிக்கச் செய்கிறது.அவர்கள் மெலின்டாவிற்கு ஏராளமான விடய ங்களைக் கற்றுக் கொடுத்துள்ளனர்.அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இந்நூல் மூலமாக தன்னுடைய வாசகர்களிற்கு அழைப்பு விடுக்கிறார் நூலாசிரியர்.அவர் தன்னுடைய இருபதாண்டு கால சமூகப் பணியில் கற்றுக் கொண்ட முக்கியமான விடயம் ஒன்றுதான் அதாவது உங்கள் சமுதாயத்தைத உயர்த்த விரும்பினால் பெண்களை அடக்கி ஒடுக்குவதை உடனடியாக நிறுத்துங்கள் என்பதையே அவர் தெளிவாக அனுபவங்களின் மூலமாகக் கற்றுக் கொண்டுள்ளார்.இவ் அனுபவம் அனைத்து சமூகங்களிற்கும் சிறந்த தொரு அனுபவமாகும்.
பெண்களிற்கு மறுக்கப்படும் உரிமைகளை மெலின்டா தன்னுடைய பயணத்தில் காண்கிறார்.பெண்களிற்கு தாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா வேண்டாமா..?தாங்கள் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் போன்றனவற்றை பெண்கள் தாங்களாகவே தீர்மானிக்கப் பெண்கள் விரும்புகின்றனர்.ஆனால் அது அவர்களால் முடிவதில்லை. என்பதை வலியுறுத்துகிறார். கருத்தடை மாத்திரைகள்,கருத்தடைக் கருவிகள் போன்ற வசதிகள் அவர்களிற்கு கிடைப்பதில்லை.தாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா வேண்டாமா..? யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்..?பாடசாலைக்குச் செல்வதற்கான உரிமை,வருமானம் ஈட்டுவதற்கான உரிமை,வெளியே சென்று வேலை செய்வதற்கான உரிமை,தங்கள் பணத்தை தங்கள் விருப்பப்படி செலவழிப்பதற்கான உரிமை,ஒரு தொழிலை தொடங்குவதற்கான உரிமை,மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்கான உரிமை,சொத்துக்களைப் பெற்றிரு ப்பதற்கான உரிமை,பாதீட்டைத் திட்டமிடுவதற்கான உரிமை, காரோட்டுவதற்கான உரிமை,கணணிப் படிப்பை மேற்கொள்வத ற்கான உரிமை, முதலீட்டாளர்களைக் கண்டுபிடிப்பதற்கான உரிமை போன்றன பெண்களிற்கு சட்டப்படியாகவும் கலாச்சாரரீதியாகவும் மறுக்கப்படுவதை மெலின்டா காண்கிறார்.அதனை இந்நூலில் வெளிப்படுத்தவும் செய்கிறார்.
கருத்தடை சாதனங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது உலகில் மிக ஏழ்மையான 69 நாடுகளில் 26 கோடிப் பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.கூடுதலாக 20 கோடிப் பெண்கள் தெனைப் பயன்படுத்த விரும்புகிறனர்.ஆனால் அவர்களிற்கு கருத்தடைப் பொருட்கள் கிடைப்பதில்லை.அதாவது வளரும் நாடுகளில் பெண்கள் அடிக்கடி கருவுற்றனர்.ஒவ்வொரு குழந்தைக்குமான இடைவெளி குறைவாக இருந்தது. குழந்தைகளிற் கிடையிலான இடைவெளி 03 ஆண்டுகளாவது இருக்கும்போது இருக்கும்போது 35 சதவீதக் குழந்தைகள் உயிர் பிழைக்கிறன.பிறந்த குழந்தைகளின் ஆயுட்காலத்தை நீடிப்பதற்கு கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதே வழி என்கிறார் மெலின்டா.
பெண்களுக்கு உரிமைகள் கிடைக்கும்போது என்ன நகழும் என்று விபரிக்கிறார் நூலாசிரியர்.அதாவது பெண்களிற்கான உரிமைகள் அவர்களிற்கு கிடைக்கும்போது சமுதாயங்கள் தழைக்கிறன என்கிறார்.ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளவர்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளும் போது எல்லோரும் பயனடைவதற்கான வழி பிறக்கிறது. சமூகத்தில் பாதிப்பேரை சேர்த்துக் கொள்ளும் போது அனைத்து உறுப்பினர்களும் நன்மை பெறுகிறனர்.பாலின சமத்துவம் எல்லோரையும் உயர்த்துகிறது.
பொருளாதார வளர்ச்சி உயரும்போது குடும்ப வன்முறை,குற்றங்கள் என்பன குறைவடைகிறன.பெண்களின் உரிமைகளும் சமுதா யத்தின் ஆரோக்கியமும் சேர்ந்தே வளருகின்றன.ஆணாதிக்க நாடுகள் துன்பப்படுவதற்கு காரணம் பெண்களைப் பயன்படுத்தா தது மட்டுமல்ல பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற ஒரு தேவையைக் கொண்ட ஆண்களால் ஆளப்படுவதுதான் அவற்றின் துன்பங்களிற்கு காரணம்.இவை தமது கண்ணோட்டத்தை மாற்றினா லொழிய ஒரு போதும் தழைக்கப் போவதில்லை என்கிறார் மெலின்டா.
ஆணாதிக்க சமுதாயம் என்பது பெண்களிற்கு வரையறுத்துள்ள சட்டங்களில் சிலவற்றை இந்நூல் வெளிக்காட்டுகிறது.அதாவது பெண்கள் வெகுசில பாத்திரங்களை வகிப்பதற்கு மட்டுமே தகுதியானவர்கள் என்றும் ஓர் ஆணைத் திருமணம் செய்து கொண்டு அவனுக்குச் சேவை செய்வது அவனுடைய குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்ப்பது,ஒரு பெண் இக்கடமை களிலிருந்து லேசாக விலகினாலும் கூட அவள் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக கருதப்பட்டது.பெண்கள் தங்களது சொந்த நலனை மனதில் வைத்துச் செயற்படவோ உயர் கல்வி கற்கவோ தொழில்ரீதியாகச் சாதிக்கவோ அவர்களிற்கு உரிமையில்லை என்றும் தங்களின் சொந்த இன்பத்திற்காக எதுவும் செய்யக் கூடாது என்றும் பெரும்பாலான ஆண்கள் நம்பினர்.
ஒரு பெண்ணின் இன்பம் குறிப்பாக பாலியல் ரீதியான இன்பம் கலாச்சாரக் காவலர்களை பெரிதும் அச்சுறுத்தியது.பெண்கள் தங்களின் சொந்த இன்பத்தை நாடிச் சென்றால் 'நீ என்னுடைய இன்பத்திற்காக இருக்கிறாய்' என்று ஆண்கள் வகுத்துள்ள எழுதப்படாத விதியை உடைப்பதாக அமையும்.இந்த யோசனைகளைக் கொண்டு பெண்களை ஒடுக்குவது ஏற்பு டையதல்ல.பெண்கள் வெறுமனே ஆண்களிற்கும் குழந்தைகளிற்கும் சேவை செய்வதற்கு மட்டுமே தகுதியானவர்கள் என்று ஆணாதிக்க சமூகம் சொல்கிறது.இவ்வாறன கஸ்டங்களைப் பெண்கள் அனுபவித்து தற்போதுதான் ஓரளவிற்கு சுதந்திரமடைந்திருக்கிறனர் என்று சுட்டிக் காட்டுகிறார் மெலின்டா.
இப் புத்தகத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள முக்கியமான மற்றொரு விடயம் வெளியே தெரியாத சமத்துவமின்மையாகும்.அதாவது சம்பளமில்லாத வேலை என்பதாகும்.சம்பளதில்லாத வேலை என்பது பெண்களின் கனவுகளையும் இலட்சியங்களையும் குழிதோண்டிப புதைத்து விடுகிறன.சம்பளமில்லாத வேலை என்பது குழந்தைக ளைப் பார்த்துக் கொள்ளுதல்,சமைத்தல்,வீட்டைச் சுத்தப் படுத்துதல், கடைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருதல்,மற்றும் பிற வேலைகள் என்பனவாகும்.
சராசரியாக உலகம் முழுவதிலும் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக சம்பளமில்லாத வேலைகளைச் செய்கிறனர்.இந்தியாவில் 6 மணி நேரம் சம்பளமில்லா வேலையைச் செய்கிறனர்.ஆனால் ஆண்கள் 1 மணி நேரமே செய்கிறனர். அமெரி க்காவில் பெண்கள் 4 மணிநேரமும்,ஆண்கள் 2.5 மணிநேரமும் மட்டுமே சம்பளமில்லா வேலையைச் செய்கிறனர்.ஆண்களும் பெண்களும் சம நேரம் சம்பயமில்லா வேலையைச் செய்யும் எந்தவொரு நாடும் இல்லை.அதாவது வாழ்நாளில் ஆண்களை விட அதிகமாக 7 ஆண்டகள் சம்பளமில்லாத வேலையைச் செய்கிறனர். இது இளநிலைப் பட்டமும் முதுநிலைப் பட்டமும் பெறுவதற்குத் தேவைப்படுகிற காலமாகும்.
பெண்கள் தாழ்ந்தவர்கள் அல்லது பாரபட்சமான சட்டங்கள் அனைத்து நாடுகளிலும் இருக்கிறன என்கிறார் நூலாசிரியர். அதற்கான உதாரணங்களையும் நாடகளின் சட்டத்தையும் எடுத்துக் காட்டியுள்ளார்.தன்னுடைய தாயின் மார்பில் தலை சாய்த்து பாலருந்தும் ஆண்குழந்தை பெண்களை அவமதிப்பதில்லை. அவ்வாறெனின் அந்த உணர்வை அவன் எங்கிருந்து பெறுகிறான் என்ற கேள்விக்கு விடையை சொல்லியிருக்கிறார் மெலின்டா.அதைப் புத்தகத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்கள் சமுதாயத்தை உயர்த்துவதற்கான வழிகளையும் சொல்லியிருக்கிறார் மெலின்டா.பெண்கள் தங்களின் குரலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்.அனைத்துப் பெண்களும் ஒன்று சேரும்போதுதான் மாற்றத்திற்கான வழி பிறக்கும் என்று சொல்கி றார்.விலக்கி வைப்ப அடித்தளமாக கொண்ட சமுதாயத்தின் கலாச்சாரத்தை மாற்றுவது சுலபமானதல்ல.ஆதிக்கம் செலுத்த விரும்புகிற மக்களோடு ஒத்துழைப்பது கடினமானதாகும். எல்லோ ரையும் சேர்த்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.அதுதான் முழுமையானவர்களாக எம்மை மாற்றும் என்று கூறுகிறது இந்நூல்.
ஆண்கள் பெண்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இதுவாகும்.மாற்றத்தை ஏற்படுத்தவும் பெண்கள் சமூகத்தை உயர்த்தவும் வாசிப்போம்.
எங்கள் இணையத்தளத்தை விட்டுச் செல்வதற்கு முன் இவற்றையும் பார்வையிடுங்கள்.நீங்கள் வாசிக்காத புத்தகங்களாக இவை இருக்க கூடும்.
21 ம்நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
மனித குலம் நம்பிக்கையூட்டும் வரலாறு
அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு
Post a Comment