.

 ராஜாவும் மந்திரியும் ஒரு நாள் மாலை நேரம் ஒரு ஆற்றங்கரை ஓரமா சென்று கொண்டிருந்தனர்.

அங்கே வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை பார்த்த ராஜா... 'மந்திரியாரே அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்’ன்னு சொன்னார்.மந்திரி பறிக்க போனார். 

அங்கே உட்கார்ந்திருந்த ஒரு குருடன் சொன்னான். 'ஐயா அதுவெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டிக் காய்.அது சாப்பிட்டால் வாந்தி தான் வரும்'என்று.

உடனே ராஜா சொன்னார். “மந்திரியாரே அதபறிச்சு சாப்பிடுங்கள் வாந்தி வருதான்னுபாக்கலாம்” என்று.

வேற வழி இல்லாம மந்திரியும் கட்டளைக்கு பயந்து சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு ஒரே வாந்தி,ராஜா குருடனைப் பார்த்து, "இதுக்கு என்னதீர்வு.?” என்று கேட்டார்.

அதற்கு அவன் ‘மன்னா! பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும் என்று சொன்னார்.

ராஜாவும் அப்படியே பண்ண... மந்திரிக்கு வாந்தி நின்று விட்டது . மந்திரிக்கு போன உயிர் திரும்பி வந்தது.

ராஜா குருடனை பார்த்துக் கேட்டார். 'உனக்குத் தான் கண் தெரியாதே..... எப்படி சரியா தீர்வு சொன்னாய்.?' அதற்கு அவன் சொன்னான். 'ராஜா..! இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி. அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரிக்காயை விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்' என்று.

ராஜாவுக்கு சந்தோஷம்,

'இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையின் கிழக்கு வாசலுக்கு போ. சாதம் கொடுப்பார்கள். போய் சாப்பிடு....'சொல்லிவிட்டு ராஜா சென்று விட்டார். கொஞ்ச நாள் கழித்து ஒரு வைர வியாபாரி 'ராஜா என்கிட்ட விலை மதிப்பற்ற வைரக் கற்கள் நிறைய இருக்கின்றன வாங்குறீங்களா?’ ன்னு கேட்டான்.

அந்த வைரக்கற்களை பார்த்த ராஜாவுக்கு இவை அசலா, போலியா என்ற குழப்பம். மந்திரிய கூப்பிட்டார்.

ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...

வைரத்தை முழுங்கித்தொலைக்கச் சொன்னால் என்ன பண்றதுன்னு பயந்து தெரியாதுன்னுட்டார்.

உடனே ராஜா 'மந்திரியாரே,போய் அந்த குருடனைக் கூட்டி வாருங்கள் . அவன்தான் காரண காரியத்தோட சரியாக சொல்லுவான்'என்றார்.

மந்திரி அந்த குருடனை கூட்டி வந்ததும் ராஜா அவனிடம் 'இது உண்மையான வைரமா.? போலி வைரமா.? அல்லது ரெண்டும் கலந்து இருக்கா' என்று பார்த்து சொல் என்றார்.

அதற்கு அவன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயிலில் கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை கையில் எடுத்து பிரிச்சு.... 'ராஜா இதெல்லாம் உண்மையான வைரம். மற்றது எல்லாம் கண்ணாடி'என்று கூறி பிரித்துக் கொடுத்தான்.

ராஜாவுக்கு ஆச்சர்யம்.

‘எப்படிப்பா கண்டு பிடிச்ச. ? விவரமா சொல்லு’ராஜா.!! வெயில்ல வைரம் சூடாகாது.ஆனா கண்ணாடி சூடாகும். அதனால் சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரிச்சேன்' என்றான்.




சந்தோஷமான ராஜா டோக்கன் ஒன்றை அவனிடம் குடுத்து, 'மேற்கு வாசலுக்கு சென்று டோக்கன குடுத்து சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு'ன்னு சொல்லி அனுப்பினார்.

கொஞ்ச நாள் கழித்து ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பித்தார்.பக்கத்து ஊரில் இருந்து எல்லாம் இளவரசி கொடுக்க தயாராக இருந்தார்கள்.

ராஜாவுக்கு குழப்பம்;

யாரை தேர்ந்தெடுப்பதென்று. மந்திரியிடம் கேட்கிறார். மந்திரியின் பதிலில் திருப்தியடை யாத ராஜா,

மீண்டும் குருடனை அரண்மனைக்குஅழைப்பித்தார்.

ராஜா அவனிடம், 'என் மகனுக்கு கல்யாணம் பண்ணபெண் பார்க்குறேன். எந்த ராஜாவோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண
காரியத்தோட தெளிவா சொல்லு' என்றார்.அதற்கு அவன் 'ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட பெண்ணை  பாருங்க. அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அப்போ
எல்லை பிரச்சினை வராது'என்றான்.

ராஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி .

'சபாஷ்.!! இந்தா டோக்கன். அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா
இரு' அப்படின்னார்.

ஒரு நாள் ராஜா அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு வர சென்னார்.

அவனிடம்'நான் ஒன்னு கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்' என்றூறார்.குருடனும் ஒத்துக் கொண்டான்.

‘எல்லோரும் என்னை பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.? சரியா சொல்லனும்' என்
றார்.

குருடன் அமைதியா இருந்தான்.ராஜா திரும்பவும் கேட்டார்.

குருடன் அமைதியாக சொன்னான்.

ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.

உண்மையில் நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம் என்று.

ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். 'ஏன்டா என்னைப் பார்த்தா இப்படிக் கூறினாய்' என வருத்தமாக கேட்டார்.

'ராஜா...முதல்ல குமட்டிக் காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா,குடுத்தது சாதத்துக்கு இலவச டோக்கன்.

நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.

அப்புறம் கோடிக் கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து
இருப்பார்.

ஆனா,நீங்க குடுத்தது சாதம் சாப்பிட டோக்கன்.

மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன். உண்மையான ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி குடுத்து இருப்பார்.

நீங்க குடுத்தது வடக்கு வாசல் சாத டோக்கன்.

ஆக.... சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து
தெரியல. ?

நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.? ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் சாதத்தோடவும் முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல
போகல’ என்றான்.

மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.

நீதி:-நீங்கள் யார் என்பதை உங்களிடம் இருக்கும் பணமோ,சொத்தோ,பதவியோ தீர்மானிப்பதில்லை..உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன.

எங்கள் இணையத்தளத்தை விட்டுச் செல்வதற்கு முன் இவற்றையும் பார்வையிடுங்கள்.உங்களுக்கு வாழ்க்கைக்கு தேவைப்படும் குட்டிக் கதைகளாக அமையும்.
  1. பறவை ஒரு குட்டிக் கதை
  2. குல்லா வியாபாரியும் குரங்குக் கூட்டமும்-குட்டிக் கதை
  3. அமைதி - ஒரு குட்டிக்கதை
  4. வாழ்க்கை ஒரு குட்டிக்கதை
  5.  கடவுள் இருக்கும் இடம் ஒரு குட்டிக்கதை
  6. இரண்டு மரம்-குட்டிக்கதை
  7. கடவுள் ஒரு குட்டிக்கதை
  8. கர்மா பற்றிய ஒரு குட்டிக்கதை
  9. ஆசைக்கு அழிவில்லை என்பதற்கான ஒரு குட்டிக் கதை
  10. ஞானம் ஒரு குட்டிக் கதை

Post a Comment

Previous Post Next Post