.

ஜான் பெர்க்கின்ஸ் எழுதியிருக்கும் அமெரிக்கப் பேரரசின் இரகசிய வரலாறு என்னும் நூல் வரலாறு தொடர்பாக ஆர்வமுள்ளவர்களிற்கு ஏற்றது.இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட "The Secret History of the American Empire" என்னும் நூலின் தமிழாக்கமாகும்.நீங்கள் இந்த உலகம் நிலையானதாகவும் அமைதியானதாகவும் சாந்தியானதாகவும் நீடித்திருக்க வேண்டும் என்று நினைப்ப வர்களானால் உங்களிற்கேற்றதே இந்தப் புத்தகம்.ஏற்கனவே வெளியாகியிருந்த பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்னும் நூலின் தொடர்ச்சியாக இந்நூல் வெளிவந்துள்ளது. பொரு ளாதார அடியாட்கள்,இரகசிய உளவாளிகள்,உலகளாவிய ஊழல் குறித்த அடிப்படை உண்மைகளை இந்நூல் அம்பலப்படுத்துகிறது.

நிறுவன அதிகார வர்க்கத்தின் கோர முகத்தினை இந்நூல் வெளிக் கொண்டு வந்துள்ளது.நிறுவன அதிகார வர்க்கம் என்னவெல்லாம் செய்கிறது,தன்னுடைய இலக்கை அடைவதற்காக நிறுவன அதிகார வர்க்கம் எந்த எல்லைக்கும்,எவ்வளவு கேவலமானதாகவும் இரக்கம ற்றதாகவும் நடந்து கொள்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்நூல்.தன்னுடைய அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக நிறுவன அதிகார வர்க்கமானது எப்படியெல்லாம் அரசாங்கங்களையும்,ஆட்சியாளர்களையும் வளைக்கிறது தன் னுடைய பக்கத்திற்கு இழுக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது இந்நூல்.

இந்நூலானது ஐந்து பாகங்களை உள்ளடக்கியுள்ளது.முதல் பாகம் ஆசியாவையும் இரண்டாம் பாகம் இலத்தீன் அமெரிக்காவையும் மூன்றாம் பாகம் மத்திய கிழக்கு பகுதிகளையும் நான்காம் பாகம் ஆபிரிக்காவையும் ஐந்தாம் பாகம் எவ்வாறு உலகை மாற்றலாம் என்பதையும் 65 தலைப்புக்களாக சுவாரஸ்யமாகவும் சலிப்பூட்டாத வகையிலும் சொல்கிறது இந்நூல்.இடையிடையே கொஞ்சம் விறுவிறுப்புக் குறைந்தாலும் வாசித்துக் கொண்டு செல்ல நல்ல அனுபவமாக அமையும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்க ஏகாதிபத்தியம் சோசலிசத்தை எவ்வாறு எதிர் கொண்டது,சோசலிசம் பரவாமல் தடுப்பதற்கு எவ்வாறான வேலைகளைச் செய்திருக்கிறது என்பதை பொருளாதார அடியாளாக வேலை செய்திருந்த பெர்கின்ஸ் தன்னுடைய புத்தகத்தில் விவரித்துள்ளார்.குள்ளநரிகள் என்போர் யார் அவர்கள் எவ்வாறான வேலைகளைச் செய்திருக்கின்றனர் என்பதையும் சொல்கிறது இந் நூல்.

பொருளாதார அடியாட்கள் மற்றும் குள்ள நரிகளின் துணிச்சலான அனுபவப் பகிர்வின் மூலமே இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களின்றி இப் பதிப்பு வெளிவந்திருக்க மாட்டாது.தங்களின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதை உணர்ந்திருந்தும்  அவர்கள் இவ் வாக்கு மூலத்தை நூலாசிரியருக்கு வழங்கியுள்ளமை உண்மையிலேயே அவர்கள் தங்களைத் தாங்களே ஆபத்துக்கு ள்ளாக்கிக் கொண்டுள்ளனர் அதனை நூலாசிரியரும் ஓரிடத்தில் சுட்டிக் காட்டுகின்றார்.

உலகப் பேரரசிற்கான அத்தனை அம்சங்களையும் அமெரிக்கா கொண்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டுகிறார் பெர்கின்ஸ்.அதற்காக அவர் பேரரசுக்குரிய வரைவிலக்கணங்களையும் அமெரிக்காவையும் ஒப்பிடுகிறார்.உலக மக்கள் தொகையில் அமெரிக்காவின் மக்கள் 5சதவீதத்திற்கும் குளைவுதான் ஆனால் 25 சதவீதத்திற்கும் மேலான இயற்கை வளங்களை அமெரிக்கா நுகர்கிறது.உலகத்தில் மிகப் பெரிய இராணுவத்தை அமெரிக்கா வைத்திருக்கிறது.ஆங்கில மொழியும் அமெரிக்க கலாச்சாரமும் உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்கிறார்.அதனை விட அமெரிக்கா பிற நாடுகளின் மீது நேரடியாக வரி விதிக்காவிடினும் பன்னாட்டு நிறுவனங்களினூடாக அதனைச் செய்கிறது ஆகிய உதார ணங்களை  அமெரிக்கா ஒரு நவீன பேரரசு என்பதை உணர்த்து வதற்காக விளக்குகிறது இந்நூல்.

பேரரசுகள் என்றென்றும் நீடித்து நிலைப்பதில்லை என்றும்,அவை வீழ்கிறன அல்லது தூக்கியெறியப்படுகின்றன என்பது வரலாறு. மற்றொரு பேரரசு அந்த வெற்றிடத்தை நிரப்புகிறது.கடந்தகாலம் நமக்கு கண்டிப்பான செய்தியைக் கூறுகிறது.வரலாறு திரும்புவதற்கு நாம் அனுமதிக்க முடியாது.இன்றை உலகில் காணப்படும் 200 மேற்பட்ட நாடுகளின் எல்லைக் கோடுகளை காலனிய சக்திகளே வரையறுத்தன.இந் நாடுகள் ஒன்றின் மீது ஒன்று குறைவான தாக்கத்தையே செலுத்துகின்றன.ஆனால் நிறுவன அதிகார வர்க்கமானது முழு உலகின் மீதும் தாக்கம் செலுத்துகிறது.அவை ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கிறன.நிறுவன அதிகார வர்க்கம் ஜனநாயக்தை ஊக்குவிப்பதாக நாடகம் ஆடுகிறது எனினும் இலாபத்தின் பெரும்பகுதியை அவை அறுவடை செய்கிறன என்கிறது இந்நூல்.

எங்களிற்கு  வெளியில் காட்டப்படும் புள்ளி விபரங்கள் எப்போதும் பொய்யனவையாகவே அமைகிறன என்பதை பெர்கின்ஸ் இந்தோனேசியாவில் உணர்ந்திருந்தார்.பொருளாதார அதிசயம் எனக் கூறப்பட்ட எவையும் சாதாரண மக்களிற்கு எப்போதும் கை கொடுக்கவில்லை அதன் பயன்கள் யாவும் பொருளாதாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களிற்கே கிடைத்தது.52% மக்கள் தினசரி 2 டொலருக்கு குறைவான வருமானத்திலேயே அங்கு வாழ்ந்து வந்ததை நூலாசிரியர் ஒப்புக் கொள்கிறார்.

அதை விட இந்தோனேசியாவில் காணப்பட்ட Nike,Ralphlauren,Adidas,Wal-Mart,The Gap ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் கிட்டத்தட்ட அடிமை உழைப்பு என்று சொல்லக் கூடிய அளவு குறைந்த கூலியையே கொடுத்தன என்பதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் 1864 ம்ஆண்டு மோனோன்கலா சண்டையின்போது பிரிட்டிஷ் பேரரசைத் தோற்றகடிக்க முடியும் என்பதை அமெரிக்க மக்கள் கண்டனர்.பிரிட்டன் படை தோல்வி யடைந்தது.சுதந்திரப் போராட்டக்காரர்கள் வெற்றி பெற்றார்கள். அதைப் போலவே 1775 ஆம் ஆண்டும் பங்கர் ஹில் சண் டையின்போதும் அமெரிக்கப் படைகள் பிரிட்டன் படைகளைத் தோற்கடித்திருந்தன.அது வரை பிரிட்டன் படைகளைத் தோற்கடிக்க முடியும் என்று யாருமே நம்பவில்லை.அது போலவே நிறுவன அதிகார வர்க்கத்தையும் தோற்கடிக்க முடியும் என்கிறார் பெர்கின்ஸ்.நிறுவன அதிகார வர்க்கத்தை மாற்றி விடலாம் என்கிறார்.

பெரு நிறுவனங்களை மாற்றுவதற்கு நான்கு காரணங்களை முன் வைக்கிறது இந் நூல்.முதலாவது உண்மை இருக்கிறது, இரண்டாவதாக பெரு நிறுவன அதிகாரிகளும் தலைமை நிர்வாகி களும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறனர் அதாவது தாங்கள் பிரச்சனைக்கு காரணமாக இல்லாமல் தீர்வுக்கு காரணமாக இருக்க முடியும்.மூன்றாவதாக பெரு நிறுவனங்கள் நண்பர்களாக உள்ளமை, நான்காவதாக வெற்றி பெறும் வரை போராடுவது என்கிறார்.

நிறுவன அதிகார வர்க்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்களினால்

  • உலகில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தினசரி வெறும் இரண்டு டொலர் வருமானத்தில் உயிர் பிழைத்திருக்கிறனர்.இது முப்பது ஆண்டுகளிற்கு முன் பெற்ற வருமானத்திற்கு இணையாகும்.
  • 200கோடி மக்களிற்கு மின்சாரம்,நீர்,தொலைபேசிகள்,தீயணைப்பு போன்ற அடிப்படைத் தேவைகள் கிடையாது.
  • உலக வங்கியின் 60 சதவீத திட்டங்கள் தோல்வியடைந்து விட்டன.
  • மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் கல்வி,சுகாதாரத்திற்குச் செலவிடும்  தொகையை விட ஒவ்வொரு ஆண்டும் தங்களது கடனுக்கான வட்டியாகவும் தவணையாகவும் செலுத்துகிறன.
  • மூன்றாம் உலகநாகளில் சொத்துக்கள் ஓரிடத்தில் சேர்வது அதிகரித்துள்ளது.பல நாடுகளில் 90 சதவீத சொத்துக்கள் வெறும் 1 குடும்பங்களிடம் குவிந்திருக்கிறன.
  • வளரும் நாடுகளில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் பெரும் பகுதியை நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. உலகின் கோப்பி உற்பத்தி 40 பெரும் நிறுவனங்களால் மட்டுமே வர்த்தகம் செய்யப்படுகிறது.
  • உலகின் மிகப்பெரும் நூறு பொருளாதாரங்களிறல் 51 பன்னாட்டு நிறுவனங்களினுடையது. அவற்றில் 47 அமெரிக்காவைச் சேர்ந்தவையாகும்.

என்று புள்ளி விபரங்களையும் தரவுகளையும் சுட்டிக் காட்டுகிறார் நூலாசிரியர்.

எம்மைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை நாம் மாற்ற வேண்டும்.குறிப்பாக பெண்ணியம் சார்ந்த பார்வைகள்,வலுத்தவன் செய்வதெல்லாம் சரி என்று கருதப்படுகிற ஆணின் உலகம் இது என்கிற எண்ணத்தை நாம் களைய வேண்டும். பொதுவான ஆண்டொன்றில் புள்ளி விபரங்களை திரட்டி ஆராய்ந்ததில் பொதுவான வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவதற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட பெண்களின் அந்தஸ்தே சிறந்த அளவுகோல் என்கிறது அந்த ஆய்வு.

பெண்களின் அந்தஸ்த்தும் அதிகாரமும் அதிகமாக இருந்தால் பொதுவான வாழ்க்கைத் தரமும் அதிகமாக இருக்கும் என்கிறது இந்நுல்.

உண்மையிலேயே உலகை மாற்றும் பணியைத் தொடக்க வேண்டியது நாள் இந்நாளே.என்று முடிக்கிறார் பெர்கின்ஸ்

வரலாறு எதிர்காலம் தொடர்பான ஆர்வமுள்ளவர்களிற்கு சிறந்த அனுபவமாக அமைகிறது இந்நூல்.வாசிப்போம்.




ஏனைய நூல் விமர்சனங்கள்

கழிவறை இருக்கை

சேப்பியன்ஸ்

மஞ்சள் பிசாசு

21 ம்நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்

நகைச்சுவைக் கதைகள்

ஹோமோ டியஸ்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

புதுக்காட்டுப் பள்ளங்கள்

கௌரவன்

நாகரிகங்களின் மோதல்

டாலர் தேசம்


அமெரிக்கப் பேரரசின் இரகசிய வரலாறு புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தம்.


You have to wait 30 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post