.

காதல் என்ற  இனிமையான உணர்வு பொழுதெல்லாம் பெரும்பாலும் பலரால் பொழுதுபோக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. வெற்றி யடைந்த காதலை விட்டு விடலாம்.தோல்வியடைந்த காதலில் உங்களை விலகிச் சென்ற காதலன்/ காதலிக்கு நீங்கள் ஏதாவது சொல்வதற்கு யோசித்திருப்பீர்கள். ஆனால் ஏமாற்றமே எஞ்சியிருக்கும் .இக் கட்டுரையானது உங்கள் முன்னாள் காதலன்/ காதலிக்கு நீங்கள் சொல்ல நினைத்தவற்றை அலசுகிறது. கட்டுரை யாளருக்கும் தனிப்பட்ட அனுபவங்கள் இருப்பதால்  அவற்றையும் இக்கட்டுரை உள்ளடக்குகின்றது.

உங்கள் முன்னாள் காதலன்/ காதலிக்கு நீங்கள் எதையாவது சொல்ல நினைத்தால் பின்வருமாறு கூறுங்கள் 

  • முதலில் உனக்கு நன்றி சொல்கிறேன்,என்னை விட்டு நீ விலக்கியதற்கு,நான் யார் என்பதைப்  புரிந்து கொண்டேன்..
  • நீ விட்டு சென்றபோது அதிகமாக  அழுதேன்.தற்கொலைக்கு கூட முயற்சி செய்தேன் .வாழும் போதே சாவைத் தேட வைத்தாய்.யார்   மேலும் அதிக அன்பு வைக்க கூடாது என்று கற்று தந்தாய்.அதற்கும் நன்றி
  • உனக்காக அதிகமா கஷ்டங்களை அனுபவித்துருக்கிறேன் அதற்கும் நன்றி இப்போது உறுதியாகி விட்டேன் .இனி இப்படி கஷ்டங்கள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய மன வலிமையும் தைரியமும் என்னிடம் உள்ளது .
  • நீ என்னை எப்போதும் நேசிக்கவில்லை என்பதற்கு நான் உனக்கு மிகவும் நன்றி கூறுகிறேன். நீ இல்லாத நிலையில் என்னைக் கண்டேன்.
  • உன்மேல் எனக்கு சிறிது கூட வெறுப்பு இல்லை.நீ எனக்கு தேவையும் இல்லை.ஆனால் நான் எப்போதும் உன்னை மதிக்கிறேன்..
  • உன்னைச் சந்திப்பதற்கு முன்பு நான் யாரையும் நேசித்ததில்லை.காதல் என்னவென்று என்னிடம் சொன்னதற்கு நன்றி!
  • காதல் என்றால் எவ்வளவு வலியை தரும் என்று உணர்த்தியதற்கும் நன்றி .
  • பல்வேறு நேரங்களில் என்னை அழவைத்ததற்கும் நன்றி.ஏனென்றால் நான் முன்பை விட இப்போது வலிமையாக உள்ளேன்..
  • நீ என்னை முதன்முதலில் தொட்டபோது எனக்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத ஸ்பரிசங்கள் கிடைத்தன என்பது உனக்கு நினைவிருக்கிறதா? நான் இப்போது அந்த நபர் அல்ல. நான் இப்போது ஆண்/பெண் ஆறுதலுக்காக ஏங்கவில்லை.
  • என் பெற்றோரை விட உன்னை அதிகமாக நேசித்தது தவறு என்றும் புரிய வைத்து விட்டாய்.அதற்கும் நன்றி.
  • நீ இருக்கும் வரை என் வாழ்க்கையின் நோக்கம் என்னவென்றே தெரியாமல் இருந்தேன்.நீ என்னை விட்டுச் சென்ற பிறகு என் வாழ்க்கையின் குறிக்கோளை தெரிந்து விட்டேன்.இப்போது அதை நோக்கிச் செல்லவும் ஆரம்பித்து விட்டேன் அதற்கும் நன்றி..
  • நீ விட்டு சென்ற பிறகு தான் நான் எனது மதிப்பையே உணர்ந்தேன்.அதற்கும் நன்றி.
  • உன்னை காதலித்த நாட்களில் உனது அன்பை அவ்வளவு நேசித்தேன் .நீ போன பிறகு தான் என் பெற்றோரின் உண்மையான அன்பை புரிந்து கொண்டேன்.அதற்கும் உனக்கு நன்றி.


  • நிச்சயம் ஒரு நாள் நீ யோசிப்பாய் "ஒருவன்/தி  நம் மேல் உயிராய் இருந்தாள்/ன்,.அவளின்/அவனின் அன்பு இப்போது இல்லையே என்று .."
  • இறுதியில் இப்படி காதல் தோல்வியில் முடிவடையும் என்று எனக்குத் தெரியாது. நான் உனக்கு சொல்ல விரும்புவது எல்லாம் ஏமாற்றுவதை நிறுத்து. ஏமாற்றுவது ஒரு பாவம்.
  • நீ என்னை விட்டு விட்டுச் சென்றுவிட்டாய்.இப்படி ஒருத்தியை/ஒருவனை  விட்டு விட்டுச் சென்று விட்டேனே என்று நீ வருத்தப்படும் அளவுக்கு நிச்சயம் வாழ்ந்து காட்டுவேன்…
  • உன்னை அதிகமாக நேசித்ததால்த்தான் என்னவோ இனி யாரையும் அதிகமாக நேசிக்க கூடாது என்று கற்று கொடுத்துச் சென்று விட்டாய் .."
  • "உன்னால் எவற்றையெல்லாம் இழந்தேனோ,அவற்றையெல்லாம் எனது வெற்றியின் மூலம் நிச்சயம் பெறுவேன்"
  • நீ வெற்றி பெற வேண்டும் என்று அளவிற்கதிகமாக விரும்பினேன்.உன்னுடைய எல்லா வெற்றிகளுக்குப் பின்னாலும் நான் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்க்கும் நீ கொடுத்த பரிசிற்க்கும் நன்றி 
  • ஆயுள் முழுவதற்கும் உன் அருகிலேயே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.அவ்வாறு ஆசைப்பட்டது தவறு என்று உணர்த்தியதற்கும் நன்றி
  • உன்னுடைய கனவுகளையும் இலட்சியங்களையும் என்னுடையதாக நினைத்திருந்தேன்.நீ சாதிக்க வேண்டுமென்று உன் பெற்றோரை விடவும் அதிகமாக விரும்பினேன்.உன்னுடைய சாதனைகளை என்னுடையதாகக் கொண்டாடக் காத்திருந்தேன்.ஆனால் என் கனவுகள் வேறு உன் கனவுகள் வேறு என்று உணர்த்தியதற்கும் நன்றி.
  • செலுத்திய அத்தனை அன்பும் நேசமும் காதலும் கொடுத்த வாக்குறுதிகளும் பேசிய பேச்சுக்களும் பொய் என்று உணர்த்தியதற்கும் நன்றி.
  • யாரையும் அளவுக்கதிகமாக அல்லது கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்று பாடம் கற்றுக் கொடுத்ததற்கும் நன்றி.
  • நீ சென்ற பின்னர் அதிகமாகக் கவலையடைந்தேன்.ஆனால் அதற்குப் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன் நீ ஒன்றும் என்னுடைய அத்தனை அன்பிற்கும் தகுதியான நபர் அல்லவென்று..


Post a Comment

Previous Post Next Post