.

ஒரு ஊரில் ஒரு குட்டிப் பறவை இருந்தது.அது பல இடங்களுக்கும் உணவு தேடி பறந்து சென்று வந்தது.ஓரிடத்தில்,ஒரே ஒரு புழு சுற்றிக் கொண்டிருந்தது.பறவை அதைக் கொத்த முயன்ற போது,புழு பறவையிடம்,என்னை மட்டும் சாப்பிட்டு விட்டால்,உன் பசி தீர்ந்து விடுமா..?சற்றுத் தூரத்தில் நாற்பது,ஐம்பது புழுக்கள் இருக்கிறன. கொஞ்ச தூரம் சென்றால் அவற்றையும் சேர்த்து சாப்பிடலாம் என்றது. இரக்கமில்லாத அந்தப் பறவை எப்போதோ கிடைக்கப் போகும் நாற்பது,ஐம்பது புழுக்கழுக்காக உன்னையும் விட்டு விட்டால் என்னவாகும்..?இப்போது,உன்னைத் தின்று பசியாறிக் கொள்கிறேன் பிறகு என் வழியில் நான் செல்கிறேன்,என்று சொல்லி,புழுவை விழுங்கி விட்டது.

கொஞ்ச தூரம் பறந்து சென்றுஓரிடத்தில் அமர்ந்தது.அது அமர்ந்த இடம் ஒரு வலை.அதிலிருந்து மீள முடியவில்லை.வேடன் அதைத் தூக்க வந்தான்.பறவை அவனிடம்,வேடனே.நான் சாதாரண குஞ்சுப் பறவை.என்னிடம் என்ன இறைச்சி இருக்கும்.என்னுடன் வா.என் இருப்பிடத்தில் பல கொழுத்த பறவைகள் உள்ளன.அவற்றைப் பிடித்துச் சென்றால்,உனக்கு நிறைய இறைச்சி கிடைக்கும் என்று சொல்லித் தப்பிக்கப் பார்த்தது.அட பறவையே நாளை கிடைக்கப் போகும் பலாக்காய்க்காக,இன்று கிடைக்கும் சுண்டங்காயை எவனாவது விடுவானா..?இன்றைய உணவை நான் பார்க் கிறேன்.நாளைக்குரியதை,அந்த நாராயணன் பார்த்துக் கொள்வான்,என்றவன்,பறவையின் கழுத்தை திருகி விட்டான்.

நீதி-நாளை என்பது நம் கையில் இல்லை



Post a Comment

Previous Post Next Post