.

யுவால் நோவா ஹராரி எழுதிய சேப்பியன்ஸ் மனித குலத்தின் சுருக்கமான வரலாறு என்னும் புத்தகம் வரலாறு தொடர்பாக ஆர்வமுள்ளவர்களிற்கு ஏற்ற நூல்.மனித குலத்தின் எழுபதாயிரம் ஆண்டு கால ஒட்டுமொத்த வரலாற்றையும் அட்டகாசமாக சொல்கிறது இந்நூல்.வாசிப்பதற்கும் உணர்ந்து கொள்வதற்கும், யோசிப்பதற்கும் உண்மையில் சுவராஸ்யமான புத்தகமாகும்.

உலகப் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் சொன்னதைப்போல் இந்தப் புத்தகத்தினை படிக்கத் தொடங்கி விட்டால் கீழே வைக்க மனம் வராதுதான்.அவரது இந்தக் கூற்று புத்தகத்தின் அட்டைப் படத்தில் அச்சிடப்பட்டுள்ளதனை அவதானிக்கலாம்.இது ஒரு வியாபார யுக்திதான் என்றாலும் அவரது கூற்று உண்மையானது என்பதை நீங்கள் இப்புத்தக்தை வாசிக்கும்போது உணர்ந்து கொள்வீர்கள்.சேப்பியன்ஸ் நூலானது நான்கு பகுதிகளாக 20 அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க வாசிக்க  சுவாரஸ் யங்கள் ஒருபோதும் குறைந்ததில்லை.

இந் நூலானது ஹராரியின் முதலாவது புத்தகமாகும்.ஒரு மில்லியன் பிரதிகளிற்கு மேல் விற்பனையாகியுள்ளதுடன் முப்பதிற்கு மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்நூல்.இதிலி ருந்தே இப் புத்தகத்தின் உள்ளடக்கம் அல்லது இப்புத்தகத்தில் ஏதோ உள்ளது என்பது புலனாகிறது.புத்தகம் அறிவோம் இணைய த்தளத்தில் யுவால் நோவா ஹராரியின்  இரண்டாவது புத்தகமான ஹோமோ டியஸ் மற்றும் மூன்றாவது புத்தகமான 21ம் நூற்றாண்டிற்கான பாடங்கள் ஆகிய புத்தகங்களிற்கான விமர் சனங்களை பதிவேற்றியுள்ளோம். தவறவிட்டவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாலில்லாக் குரங்கிலிருந்து தோன்றிய ஹோமோ சேப்பியன்ஸ் இன்று புவியில் அச்சுறுத்தல் குறைந்த இனமாக மாறியுள்ளதுடன் ஏனைய உயிரினங்களிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளான்.குறிப்பாக இப் புவியை வெற்றி கொண்டுள்ளான்.இது எவ்விதம் சாத்தி யமாயிற்று என்பதை அழகாகவும், சுவாரஸ்யமாகவும், விறு விறு ப்பாகவும்,சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூறியுள்ளார் ஹராரி.

எம்மை மிரட்சியடைய வைக்கிற சில விடயங்கள் இப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.அவற்றில் சில 
  • மனிதன் கண்டுபிடித்த மதங்களிலேயே வெற்றிகரமானது முதலாளித்துவம்
  • வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகிற விதம்தான்
  • தற்காலத்தில் நாம் கற்கால மனிதர்களை விட அப்படியொன்றும் சந்தேசமாக இல்லை.
இவ்விடயங்கள் உங்களுக்குப் பிரமிப்பூட்டும்.வாசித்தறியுங்கள்.

எங்களுடைய பிற மனித இனத்தவர்களாகிய நியான்டர்தாஸ் மற்றும் ஹோமோ எரெக்டஸ் ஆகிய மனித இனங்களிற்கு என்ன நடந்தது என்பதற்கான விடை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.இன்றைய உலகில் நியான்டர்தாஸ்,ஹேமோ எரெக்டஸ் மற்றும் டெனிசோவா  ஆகிய மனித இனங்கள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டுள்ளன அதாவது அவர்களில் ஒருவர் கூட தற்போது உயிரோடு இல்லை.ஏனைய இனங்களில் அல்லது மிருகங்களில் அவ்வாறு காணப்படவில்லை.மனித இனத்தில் மட்டும்தான் சேப்பியன்ஸ் இனத்தினர் மட்டுமே உயிரோடு உள்ளனர்.இதற்கான காரணங்களாக இனக்கலப்புக் கோட்பாடு மற்றும் மாற்றீட்டுக் கோட்பாடு ஆகியவற்றை முன்வைக்கிறார் ஹராரி.இனக்கலப்பு கோட்பாட்டின் படி நியான்டர்தாஸ் மற்றும் ஹோமோ எரெக்டஸ் ஆகிய மனித இனங்களுடன் சேப்பியன்ஸ் இனக்கலப்பில் ஈடுபட்டு தற்போதைய மனித இனம் உருவானது என்பதாகும்.அதன்படி யாரும் தூய்மையான சேப்பியன்ஸாக இருக்க முடியாது மாற்றீட்டுக் கோட்பாடு சேப்பியன்ஸ்ஸைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது. அதாவது வள வசதிகளிற்கான போட்டி தீவிரமடைந்த போது அது வன்முறைகளிற்கும் இனப்படுகொலைகளிற்கும் இட்டுச் சென்றி ருக்ககூடும் என்கிறது இந்நூல்.ஏனெனில் சேப்பியன்ஸ் சகிப்புத் தன்மையுடையவர்களல்லர் என்பதாகும்.

சேப்பியன்ஸ் செல்கிற இடமெல்லாம் அழிவுகளையே ஏற்படுத்தினர் என்பது வரலாற்று உண்மையாகும்.உதாரணமாக அவுஸ்ரேலியாவில் மனிதர்கள் கால் வைத்த போது காணப்பட்ட 2மீற்றர் நீளம் கொண்ட கங்காருக்கள்,மிகப் பெரிய சிங்கங்கள்,கோலாக் கரடிகள்,பறக்க முடியாத பறவைகள் வேம்பாட் விலங்கினம் மற்றும் பிற பாலூட்டிகள் ஆகிய 47 வகை விலங்கினங்கள் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளிற்குள்  ஒட்டுமொத்தமாக மறைந்து போயின இதனால் அவுஸ்ரேலிய சூழல் மண்டலம் முழுவதும் மாற்றியமைக்கப்பட்டு உணவுச்சங்கிலிகள் உடைக்கப்பட்டன இவற்றிற்கு சேப்பியன்ஸ்தான் பொறுப்பா என்ற கேள்விக்குறியுடன் தொடர்கிறார் ஹராரி.இதற்கு சமீபத்தைய நிகழ் வுகளையும் உதாரணமாகக் காட்டியிருக்கிறார்.நியூசிலாந்தில் பெரு விலங்குகள் 45000 ஆண்டுகள் ஒரு கீறல் கூட இல்லாமல் வாழ்ந்து வந்தன என்றும் மனிதர்கள் இத்தீவில் கால்பதித்த 800 ஆண்டு களிற்குள் பெரு விலங்குகளில் பெரும்பகுதி அழிவடைந்து விட்ட தாகவும் 60 சதவீத  பறவை இனங்கள் அழிந்ததாகவும் சொல்கிறார். இதைவிட சைபீரியா,ராங்கெல் தீவகள்,வட அமெரிக்கா  என சமீபத்தைய உதாரணங்களைப் பட்டியலிடுகிறார்.இதிலிருந்து சேப்பியன்ஸ் ஒரு கொலையாளி என்பதையே வரலாறு எமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது என்பது ஹராரியின் வாதமாகும்.

வேளாண்புரட்சியை உண்மையிலேயே யாரும் யோசிக்காத வித்தியாசமான கண்ணோட்டத்தில் சொல்கிறது இந்நூல்.இதனை அவர் கோதுமையின் கண்ணோட்டத்திலிருந்து பார்த்திருக்கிறார். அதாவது கோதுமைதான் மனிதர்களைப் பயன்படுத்திக் கொண்டது என்பது அவரது வாதமாகும்.காட்டுப் புல்லாக இருந்த கோதுமை, குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே வளர்ந்த கோதுமையானது திடீரென்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.எது எப்படியென்றால் கோதுமை தன்னுடைய சுயநலத்திற்காக மனிதர்களைப் பயன் படுத்திக் கொண்டது என்கிறார்.கோதுமை மனிதர்களை முதுகொடிய வேலை செய்ய வைத்து,களையெடுக்க வைத்து, நோய்,பீடையிலிருந்து பாதுகாத்து,காவல்நின்று,நீர்பாய்ச்சி அதனை அறுவடை செய்தனர்.இதற்கு மாறாக  கோதுமை எமக்கு என்ன கொடுத்தது..?ஊட்டச் சத்துள்ள உணவுகளைக் கொடுக்கவில்லை அது.சரிசம உணவையும் தரவில்லை அது.அதனால் கோதுமையை நாம் வளர்க்கவில்லை அதுதான் எம்மை வளர்த்தது என்று சொல்லி பிரமிக்க வைக்கிறார்.கோதுமையின் கண்ணோட்டத்திலிருந்து வரலாற்றை சொன்னவிதம் அருமையானது.

வேளாண் புரட்சி எங்களுடைய பண்ணை விலங்குகளிற்கு எப்போதும் ஒரு கொடூரத்தையே பரிசாக வழங்கியுள்ளது என்பது ஹராரியின் வாதமாகும். விலங்குகளின் துன்பம் எவ்விதத்திலும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பது உண்மையாகும். விலங்கு களிற்கும் உணர்வுகள் உண்டு என்பது நிரூபிக்கப்ப ட்டுள்ளது.

பல்வேறு மனித சமுதாயங்கள் எப்போதும் கற்பனையான அடுக்கதிகாரத்தை பின்பற்றிய போதும் ஒரே ஒரு விடயத்தில் அனைத்து மனித சமுதயாங்களும் விதிவிலக்கின்றி பெண்களை குளைவானவர்களாகவும் ஆண்களை மேல் நிலையிலும் வைத்திருந்தன என்கிறார் நூலாசிரியர்.அனைத்து விடயங்களும் ஆண்களுக்குச் சாதகமாகவே காணப்பட்டன.பெண்கள் ஆண்களின் அல்லது குடும்பத்தின் சொத்தாகவே கருதப்பட்டனர் என்பதே உண்மையாகும். பெண்கள் வெறும் பொருளாகவும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் இயந்திரங்களாகவுமே அனைத்து சமுதா யங்களிலுமே காணப்பட்டனர்.

அனைத்துக் கலாச்சாரங்களும் ஆண்மையைப் பெண்மையை விட முக்கியமானதாக கருதியதற்குப் பின்னாலுள்ள உயிரியல் காரணங்களை இந் நூல் தேடுகிறது ஆனாலும் அதற்குப் பொருத்தமான விடை கிடைத்ததாகத் தெரியவில்லை. அனைத்தும் அனுமானங்களே..

பெண்களை விட ஆண்கள் வலிமையானவர்கள் என்ற கருத்து பொத்தம் பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு.ஆனால் இது சில வலிமைகளிற்கு மட்டுமே.பசி,களைப்பு,நோய் போன்றனவற்றிற்கு ஆண்களை விட பெண்கள் அதிக சிறப்பாகத் தாக்குப் பிடிக்கிறனர்.அதை விட வரலாறு முழுவதும் சட்டம், மதம், அரசியல்,போன்ற உடலுழைப்பு குறைவாகத் தேவைப்படுகிற துறைகளில் பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டே வந்துள்ளனர்.மாறாக வீட்டு வேலைகள்,கைவினைப் பொருட்கள்,வயல் வேலை போன்ற வற்றில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.இந்த உண்மை மேற்கூறப்பட்ட கோட்பாட்டிற்கு பெரும் சவாலாக காணப்படுகிறது.உடல் வலிமை அல்லது தாங்குதிறன் அடிப்படையில்  சமுதாய அதிகாரமானது பிரிக்கப்பட்டிருந்தால் பெண்கள்தான் அதிகமான அதிகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும்.அதைவிட உடல் விலிமைக்கும் சமுதாய ரீதியான அதிகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பது ஹராரியின் வாதம்.பெண்கள்  உடல் வலிமையை விட நிர்வகிக்கும் பொறுப்புக்களிற்கும் உயரவில்லை.இதனை கேள்வி கேடக வேண்டியது அவசியமாகிறது.தற்போது இது தொடர்பாக எந்த சரியான விடையையும் கண்டுபிடிக்க முடியவில்லை.எனவே எம்முடைய அனுமானம் எல்லாம் தவறாக இருக்க கூடும் என்கிறார் நூலாசிரியர்.

எம்முடைய சாதனைகளுக்காக எம்மை நாமே பாரட்டிக் கொள்ளலாம் என்கிறார் நூலாசிரியர்.ஏனெனனில் இது பிற இனைத்து விலங்குகளினதும் தலையெழுத்தை நாம் முற்றாகப் புறக்கணிக்கும் பட்சத்தில் மட்டுமே சாத்தியம் என்கிறார்.காரணம் நோயிலிருந்தும் பஞ்சத்திலிருந்தும் எம்மைப் பாதுகாக்க குரங் குகளும் பசுக்களும் ஆய்வுகூடங்களில் பெரும் விலையைக் கொடுத்துள்ளன.இரு நூற்றாண்டுகளாக பண்ணை விலங்குகள் கொடூரமான சித்திரவதைகளை அனுபவிக்கிறன.எனவே எம்முடைய செயலுக்கு நாமே நம்மைப் பாரட்டினாலத்தான் உண்டு என்பது நூலின் வாதம்.

இறுதியாக சேப்பியன்ஸின் முடிவு குறித்து விவரித்திருக்கும் விதம் கற்பனையானதல்ல.உண்மையில் அது நிகழக்கூடும்.தற்போதைய மரபணுப் பொறியியல் தொழில்நுட்பம் நம்மை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்று ஊகிக்கிறார் ஹராரி.அது வெறும் ஊகமல்ல.சேப்பியன்ஸின் முடிவாகக் கூட மாறக் கூடும். எங்க ளுடைய உண்மையான கேள்வி 'நாம் என்னவாக விரும்புகிறோம்' என்பதல்ல மாறாக,'நாம் எதைச் செய்ய விரும்புகிறோம்' என்பதுதான் இக் கேள்வி குறித்து அனைவரும் சிந்திப்பதற்கான நேரம் இதுவாகும் என்பது நூலின் வாதம்.

வரலாறு குறித்தும் எதிர்காலம் குறித்தும் சிந்திப்பவர்களிற்கு ஏற்றது இந்நூல் வாசிப்போம்..!

சேப்பியன்ஸ்-மனித குலத்தின் சுருக்கமான வரலாறு 




சேப்பியன்ஸ் நூலினை வாசிக்க கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.
You have to wait 30 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post