.

Menstrual cup பற்றிய நிறைய தரவுகள் இணையத்தளம் முழுவதும் கிடைக்கிறன.இதைப் பயன்படுத்தலாமா..? வேண்டாமா என்பதைப் பற்றிய குழப்பங்கள் பெரும்பாலானோரிடையே காணப்படுகிறது. உங்களிற்கு எது வசதியோ அதை நீங்கள் பயன்படுத்தலாம்.Menstrual cup இப்போதுதான் எங்களிடையே அறிமுகமாகி இருக்கிறது. மேலைநாடுகளில் இது பிரபலம்.மாதவிடாய் என்பதற்காக பெண்கள் மற்ற விடயங்களை விட முடியாது.மாதவிடாய் என்ற உணர்வே வராத அளவிற்கு இந்த  பயன்படுத்தும் போது காணப்படுகிறது .எனவே அதைப்பற்றி அலசுகிறது இந்தக் கட்டுரை.

முதலில் பெண்ணுறுப்பின் கட்டமைப்பே பல பேருக்குத் தெரியாத நிலைமையே காணப்படுகிறது.முறையான பாலியல் கல்வி அவசியம்.ஆண்களும்¸பெண்களும் முறையாகத் தெரிந்து கொள்வதுதான் பிற்கால அவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு தேவையான விடயமாக இருக்கும்.சிறுநீர் வெளியேற ஒரு துளை, பெண்ணறுப்பில் ஒரு துளை, மலம் வெளியேற ஒரு துளை என மூன்று துளைகள் இருப்பதே பலபேருக்கு தெரியாமல் இருக்கிறது


Female reproductive system
பெண் இனப்பெருக்கத் தொகுதி

மேலுள்ள படத்தில் Vulva என்பது பெண்ணுறுப்பின் entrance. Vagina என்பது ஒரு tube போன்றது. Cervix என்பது கருப்பை வாய்.


How to insert menstrual cup

நாம் உபயோகிக்கும் Menstrual cup,Vagina எனப்படும் குழாய்போன்ற பகுதியில் Vulva வழியாக நுழைத்து பொருத்த வேண்டும்.

மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள Cervix வழியாக இரத்தம் வெளியேறும். Cervix உள்ள துளையானது குழந்தை பிறக்கும் தருணம் தவிர ஒரு சிறு துளை அளவிலேயே இயல்பு நிலையில் இருக்கும்(கீழுள்ள படங்களில் காட்டப்பட்டுள்ளது). இதன் வழியே வெளியேறிய உதிரமானது திரும்ப உடலுக்குள் அதாவது கர்ப்பபைக்கு செல்ல வாய்ப்பே இல்லை. Menstrual cup- ம்(1.6 inch) உள்ளே செல்ல வாய்ப்பே இல்லை.


Different of cervix

E-Commerce தளங்களில் சொல்லப்பட்டுள்ள எதிர்மறையான கருத்துக்களைப் பற்றி பார்ப்போம்.

1. Blood leak உள்ளது.பெரிதாக பயன்படவில்லை இது ஒரு 25%-30% விமர்சனம். Menstrual cup சரியாக insert செய்யப்படாததே அதாவது  (கீழே படத்தில்) இதற்கு பெரும்பான்மையான காரணம்.



சரியான Cup size வாங்காததும் ஒரு காரணம்.இது தவிர சிலருக்கு tilted uterus(கீழே படத்தில்) இயற்கையிலேயே இருக்கலாம். இது மருத்துவ பரிசோதனைகளில் எதேச்சையாக கண்டுபிடிக்கும் வரை தெரியாது.அவர்களுக்கு இரத்தக் கசிவு இருக்கும். அதுவும் position adjust செய்து பொருத்தினால் இரத்தக் கசிவு இருக்காது.


அப்போ 100%  இரத்தக் கசிவு இருக்காதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை.ஒரு 5% இரத்தக் கசிவு இருக்கிறது. அதற்கு  மெல்லிய துணிகளைப்  பயன்படுத்தி கொள்ளலாம்.அதுவும் கூடுதலான இரத்தப் போக்கு நாட்களில் மட்டுமே.

இரவில் படுக்கும்போது Menstrual cup, horizontal position ல் இருப்பதால் இரத்தக் கசிவு இருக்கும்.அப்போதும் தேவைக்கேற்ப Napkin அல்லது துணிகளைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

துணி அல்லது Napkin உபயோகிக்க Menstrual cup எதற்கு என்ற கேள்வி எழுந்தால் 5% இரத்தக் கசிவு என்பது பெரும் குறையல்ல. கண்டிப்பாக ஆடைகளில் கறைகள் இல்லாமல் தவிர்க்கலாம்.12 மணி நேரம் வரை. 12 மணி நேரத்துக்குள் குறைந்தது 3 Napkins மாற்ற வேண்டி வரும்.அதுவும் கறைகளை   நினைத்து வெளியே செல்லும்போது பதற்றமாகவே இருக்கும்.

இந்த பதற்றம் Menstrual cup பயன்படுத்தினால் அறவே இல்லை.

இது தவிர Napkins பயன்படுத்தாமலிருந்தால் அல்லது பயன்படுத்துவதை குறைப்பதால் சுற்றுசூழல் பாதுகாப்புக்கும் உதவியாக இருக்கும்.

2.பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதாக சிலர் சொல்லியிருந்தார்கள். இந்த Menstrualcup சிலிக்கான் உபயோகப்படுத்தி செய்யப்படுகிறது. கொதிக்கும் நீரில் 5 நிமிடம் வைத்து நன்றாக ஓடும் நீரில்  சுத்தம் செய்து உபயோகிக்கும்போது அரிப்பு மற்றும் தொற்றுக்கள் வர வாய்ப்பில்லை.சரிவர சுத்தம் செய்யாமல் உபயோகித்தால் அரிப்பு மற்றும் தொற்றுக்கள்நிச்சயமாக வரும்.

12 மணிக்கு ஒருமுறை கண்டிப்பாக கோப்பையை அகற்றி சேகரிக்கப்பட்ட உதிரத்தை அகற்றிவிட்டு சுடுநீரில் அமிழ்த்திய பிறகே மீண்டும் பயன்படுத்த வேண்டும்.நேரம் இருந்தால் 6 மணிக்கு ஒருமுறை மாற்றுவது நல்லது.

Tampon பயன்படுத்தினால் பிறப்புறுப்பில் அரிப்பு மற்றும் தொற்றுக்கள் வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த Menstrual cup பயன்படுத்தும்  ஒரு பெண்ணுக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டதாகவும் அதுவும் அவர் பொருத்தும்போது செய்யும்போது நீளமான நகம் கீறி அது வாயிலாக தொற்று ஏற்பட்டதாகவும் கண்டறிந்துள்ளார்கள். நகம் வெட்டப்பட்ட கைகளால் பொருத்துவதே  பாதுகாப்பானது.

பொதுவாக Size of the cup after giving birth, before giving birth பொறுத்து வாங்கலாம்.20 வயதிற்கு உட்பட்டவர்கள் Small size குழந்தை பிறப்புக்கு முன் Medium size குழந்தை பிறப்புக்கு பின் Large size தேர்வு செய்யலாம்.

அதிக உதிரப்போக்கு இருப்பவர்கள்பெரிய கோப்பையை  தெரிவு செய்யலாம் என சில Menstrual cup நிறுவனங்கள் விளம்பரம் செய்கிறார்கள்.ஆனால் குழந்தை பிறப்புக்கு முன்னர் யோனி இறுக்கமாக  இருப்பதால் பெரிய கோப்பையை பொருத்தும்போது செய்யும்போது வலியை ஏற்படுத்தலாம்.

சரியாக Cup தெரிவு செய்ய Cervix measuring test ஒன்று உள்ளது.கைகளை நன்கு சவர்க்காரம் கொண்டு கழுவிய பிறகு கீழேு படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் ஆள்காட்டி விரலையோ அல்லது நடுவிரலையோ யோனிக்குள் க்குள் நுழைத்து பார்த்தால் நமது மூக்கின் நுனியை தொடும்போது உணர்வதை போல் cervix தென்படும்.உங்கள் விரல் முழுவதும் உள்ளே சென்றால் high cervix இருப்பதாக புரிந்து கொள்ளலாம். பாதி விரலிலே தென்பட்டால் low cervix.


Cervix measuring test அவரவர் மாதவிடாய்க்கு 2 அல்லது 3 நாட்களிற்கு முன்பு மேற்கொள்வது சரியாக இருக்கும். ஏனென்றால் நம் மாதவிடாய் சக்கரத்தில் Cervix, up and down movement ல் இருக்கும்.Menses ன் போது அது கீழ் இறங்குவதால் அந்த சமயத்தில் cervix height measure செய்து cup வாங்கினால் சரியாக இருக்கும்.

இதையெல்லாம் செய்து பார்க்க கடினமாக இருந்தால் நடுத்தர அளவான வாங்கி பார்த்து சோதித்துக் செய்து கொள்ளலாம்.

வயது வந்த பெண்கள் அனைவருக்கும் இது மிகவும் உபயோகமான பொருள் என்றாலும் நமது சமூகத்தில் நம்பப்படும் சில மூடத்தனங்களால் திருமணத்துக்கு முன்பு இதை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டியிருக்கிறது.கன்னித் தன்மை தொடர்பாக போதிய தெளிவில்லாமல் இருக்கும் எம் சமூகத்தில் பெண்களை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் காணப்படுகிறது. முறையான பாலியல் கல்வியும்¸போதிய விழிப்புணர்வுமே சமூகத்தை மாற்றியமைக்கும்.இந்த கன்னி திரை பற்றிய விழிப்புணர்வு நம் சமூகத்தில் ஏற்பட்டு எல்லா வயது பெண்களும் Menstrual cup உபயோகிக்கும் நிலை வந்தால் மாதவிடாய் நாட்களை சௌகரியமாக கடக்கலாம்.

இறுதியாக துணி உபயோகிப்பதே நல்லது என்றாலும் இந்த காலங்களில் பெண்கள் பணிக்கு செல்வது, வெளியிடங்களுக்கு செல்வது அதிகமாகி இருப்பதால் துணியை உபயோகித்து மாதவிடாய் நாளில் பெரும் பகுதியை சமாளிப்பது பெரும் துயரம்.துணியோ,Napkins  4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றுவது நலம்.வெளியிடங்களுக்கு செல்லும்போது மாற்றுவது, அப்புறப்படுத்துவது மிகவும் கடினம்.

தவிர Napkin மாதாமாதம் வாங்க பல குடும்பங்களில் பொருளாதாரம் இல்லாத நிலையும் காணப்படுகிறது .அதனால் துணி உபயோகிக்க வேண்டிய கட்டாயமும் அல்லது ஒரே நாப்கினே நாள் முழுவதும் உபயோகிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.இதனால் பிறப்புறுப்பில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு பல அவதிகளுக்கு உள்ளாகலாம்.துணி உபயோகிக்கும்போது அதை வெந்நீரில் முக்கி நல்ல தரமான சவர்க்காரம் கொண்டு துவைத்து வெயிலில் உலர்த்தி உபயோகிப்பதே நல்லது.

இத்தனை இடர்பாடுகளை இந்த Menstrual cup குறைக்கிறது. இந்த cup ஐ குறைந்தது 6 மாதம் அதிகபட்சம் 10வருடம் வரை பயன்படுத்தி கொள்ளலாம்.எனக்குத் தெரிந்தவரை Menstrual cup பயன்படுத்துவதால் இதுவரை பெரிய பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கபடவில்லை.Napkin உபயோகத்தை குறைத்து சுற்று சூழலுக்கும் நன்மை செய்யலாம்.

Menstrual cup பயன்பாடு பற்றி இணையத்தில் நிறைய காணொளிகள் மற்றும் வலைதளங்கள் உள்ளன.

Cup பயன்படுத்தும்போது சரியாக நகம் வெட்டிய சுத்தமான கைகளை பயன்படுத்துங்கள். கப்பை நன்றாக கொதிக்கும் நீரில் 5 முதல் 7 நிமிடம் முக்கி எடுத்து விட்டு உபயோகியுங்கள்.

உங்களுக்கு சௌகரியமான இணையத்தில் சொல்லப்படும் எந்த position ல் வேண்டுமானாலும் cup insert செய்து கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் squatting position comfortable உணர்வை தருகிறது.

அதே போல Cup insert செய்ய cup folds இணையத்தில் நிறைய இருந்தாலும் push down fold மிகவும் எளிமையாக உள்ளது.இந்த முறையில் insert செய்வதால் வலி பெரும்பாலும் இருப்பதில்லை. குறைந்தது 4மணி நேரம் முதல் அதிகபட்சம் 12மணிநேரம் வரை நாம் இந்த cup உபயோகித்து கொள்ளலாம்.

ஒரு நாளுக்கு இருமுறை கோப்பையை அகற்றி சுத்தம் செய்து உபயோகிப்பதே நன்மை தரும்.

மாதவிடாய் முடிந்ததும் அடுத்த மாதம் வரை அதற்கென தரப்பட்ட பையில் சுத்தமான இடத்தில் பாதுகாக்கவும்.திரும்ப அடுத்த மாதம் பயன்படுத்தும்போது செய்யும்போதும் வெந்நீரில் முக்கியே பயன்படுத்தவும்.

சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும்போதும் cup வெளியே வராது.Constipation problem இருக்கும்போது cup வெளியே வர வாய்ப்புள்ளது.

இலங்கையில் இந்த மாதவிடாய்க் கோப்பைகள் Daraz,Ali express ஆகிய நிகழ்நிலை வர்த்தக தளங்களில் கிடைக்கிறது. எனினும் இன்னனமும் சாதாரண கடைகளில் பாவனைக்கு வரவில்லை.அந்நிலை மாறி விiவில் இலகுவாக பெறக்கூடிய நிலை வரவேண்டும். பெண்கள் மாதவிடாய் நாட்களில் அனுபவிக்கும் துன்பங்களிற்கு ஒரு தீர்வாக இது அமையக்கூடும்.உண்மையில் அனைத்து வயது பெண்களும் பாரபட்சமின்றி பயன்படுத்தும் நிலை வரும்போது மாதவிடாய் நாட்களை இலகுவாக கடந்து செல்லக் கூடியதாக இருக்கும்.

Post a Comment

Previous Post Next Post