.

பக்தவச்சலம் வேணுகோபால் தொகுக்கப்பட்ட நகைச்சுவைக்கதைகள் என்ற நூலானது நகைச்சுவைப் பிரியர்களிற்கும் சிறுவர்களிற்கும் ஏற்ற புத்தகமாகும்.

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் நகைச்சுவைகளை பார்த்து இரப்பதற்கு கையடக்கத் தொலைபேசி¸ தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் கணணிகள் காணப்பட்டாலும் நகைச்சுவையொன்றை எழுத்தில் வாசித்து விளங்கிக் கொள்வதென்பது இன்றியமையாததாகும்.துரதிஸ்டவசமாக எம்மில் பெரும்பாலானோர் அதைச் செய்வதில்லை.பெரும்பாலானோருக்கு வாசிப்பதற்கு புத்தக்தை எடுத்தாலே நித்திரைதான் வரும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அவ்வாறு இயந்திரமயமாகிவிட்ட¸ வாசிப்பு பழக்கம் அருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் நகைச்சுவைக் கதைகளைப் படிப்பது இன்றியமையாதது.மன நிம்மதி கடைக்க மனிதன் அறிவை வளர்க்க வேண்டும்.பயனுள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும்.எமக்கு முன்னால் தோன்றிய மகான்களும் அறிஞர்களும் நமக்கு அளித்துள்ள நூல்களைப படிப்பதால் ஏற்படும் மனப்பக்குவம் கட்டாயமாக நிரந்தரமானதாக அமையும்.மனநிறைவையும் மன நிம்மதியையும் கொண்டுவரும்.

அது மன இறுக்கத்தை மனச்சோர்வைக் குறைக்க உதவும்.'வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்" என்ற பழமொழியின்படி இக் கதைகள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளது.இதைப் வாசிப்பவர்கள் தாங்கள் மட்டும் சிரிக்காமல் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் சிரிக்க வைக்க முடியும்.

135 பக்கங்களில் மொத்தமாக 18 நகைச்சுவைக் கதைகள் காணப்படுகிறன.இவை வெவ்வேறு காலகட்டங்களில் பலரால் எழுதப்பட்டும் சொல்லப்பட்டும் வந்துள்ளன அவற்றின் தொகுப்பாக வெளிவந்துள்ளது இப்புத்தகம்.

"நகைச்சுவைக்கதைகள்" நகைச்சுவைப் பிரியர்களிற்கும் அனைவருக்கும் ஏற்ற புத்தகமாகும்.வாசியுங்கள்.



Post a Comment

Previous Post Next Post