.

யுவால் நோவா ஹராரி எழுதிய ஹோமோ டியஸ் என்னும் இந்நூல் ஒரு தீர்க்க தரிசனம் அல்ல. எம்முடைய தற்போதைய தேர்ந்தெடுப்புக்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு வழிதான் இந்நூல்.இந்தக் கணிப்பு தவறு என்று நிரூபிக்க கூடிய விதத்தில் நாம் வித்தியாசமான தெரிவுகளை மேற்கொள்ள இந்ந புத்தகம் வழிவகுத்தால் அனைவருக்கும் நல்லது.எதிர்காலத்தில் என்ன நடைபெறப்போகிறது என்பதை எடுத்துரைக்கிறது.வருங்காலத்தின் ஒரு சுருக்கமான பார்வையே இந்நூல்.ஹோமோ டியஸ் என்றால் என்ன என்பதில் உங்களுக்கு குழப்பங்கள் இருக்கக்கூடும்.ஹோமோ டியஸ் என்பது மேம்பட்ட மனிதன் என்பதை எடுத்துரைக்கிறது இந்நூல். எதிர்காலத்தில் ஹோமோ சேப்பியன்ஸ் ஆன எம்மை விட ஹோமோ டியஸ் எப்படி இப் பிரபஞ்சத்தை ஆளப் போகிறான் என்பதை கட்டியம் கூறுகிறது இந்நூல்.வாசிப்பவர்களிற்கு இந் நூலானது அதிர்ச்சியூட்டக்கூடும் இப்படியெல்லாம் நடைபெறுமா என்று நீங்கள் யோசிக்கக் கூடும்.இது நடைபெறும் பொழுது நாம் இருக்கப் போவதில்லைத்தானே என்று எண்ணுவீர்கள். மனிதர்கள் விலங்குகளிற்கு என்ன செய்தார்களோ..? அதுவே காலவோட்டத்தில் ஹோமோ சேப்பியன்ஸ்க்கும் நடைபெறாது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.இது ஒரு எதிர்வுகூறல்தான்.2040¸2100¸2700 ஆகிய ஆண்டுகளாகும்போது என்ன நடைபெறலாம் என்பதை பிரமிக்கத்தக்க விதத்தில் விளக்குகிறது இந்நூல்.

நூலாசிரியரின் அபாரமான தெளிவும் கவனக்குவிப்பும் இந்நூலை எம்முடைய சிந்தனையைத் தூண்டும் விதமாக அற்புதமான படைப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல்.மனித இனம் எதைநோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாகவும் துல்லியமாகவும் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.இது உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக அமையக் கூடும்.நீங்கள் வாசித்து முடித்து நெடுங்காலம் ஆனாலும் நினைவில் கொள்ளத்தக்க மறக்க முடியாத கேள்விகளைத் தொடுக்கிறது இந்நூல்.

வரலாற்றுக் காலத்தில் தொடங்கி மனிதர்கள் பூமியை வெற்றி கொள்ளுதல் அதன் பின்னர் மனிதர்களை மேம்பட்ட மனிதர்கள் எப்படி வெற்றி கொள்கிறனர் என்னவெல்லாம் நிகழக் கூடும் என்பதை விளக்கமாக சொல்கிறது ஹோமோ டியஸ்.

எழுத்து பூர்வ மொழியானது யதார்த்த்தை விவரிப்பதற்கான ஒரு நல்ல வழியாக அமையும்.ஆனால் அது மெல்ல மெல்ல யதார்த்தத்தை மாற்றியமைப்பதற்கான சக்தி வாயந்த ஒரு வழியாக மாறியுள்ளது.அதிகார பூர்வமான அறிக்கைகள் யதார்த்தத்துடன் முரண்படும்போது சில சமயங்களில் யதார்த்தம்தான் பின்வாங்கி ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.எதிர்காலத்தில் மட்டுமல்ல நடப்பாண்டிலும் இதுவே நிதர்சனமாக காணப்படுகிறது.

விலங்குகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான தனித்துவமான பண்பு மனிதர்களிற்கு இருக்கிறது என் எல்லோரும் யோசிக்கிறோம்.அந்தக் கருத்துக்கள் சரியல்ல என்கிறார் நூலாசிரியர்.விலங்குகளிற்கும் மனிதர்களைப் போன்று உணர்ச்சிகள் அறிவுத்திறன்கள் இருக்கிறன என்றும் சொல்கிறார்.பிறகு எப்படி மனித குலம் ஆதிக்கம் செலுத்தியது என்பதற்கு கருவிகளின் உருவாக்கமும் அறிவும்தான் என்று அவரே பதிலளிக்கிறார்.கருவிகளை உருவாக்குவதில் மனிதர்கள் வெகுவாக விஞ்சியுள்ளனர் ஆனால் அறிவு விடயத்தில் தெளிவான பதில் காணப்படவில்லை என்கிறார்.

மனிதர்களின் உள்ளுணர்வகினை வெளிப்படுத்தும் மனிதவாதப் புரட்சி சம்பதந்தமாக 1300ம் ஆண்டையும் தற்போதைய நூற்றாண்டையும் மிகச் சரியான உதாரணங்களுடன் விளக்குகிறது இந்நூல்.இந்த நூற்றாண்டில் கேட்கும் அதே கேள்வியை 12ம் நூற்றாண்டிலோ அல்லது 13ம் நூற்றாண்டிலோ கேட்டிருக்க முடியாதுதான்.

கொலை ஒரு தவறான செயல் என்பதற்குக் காரணம் 'நீங்கள் யாரையும் கொலை செய்யக் கூடாது" என்று கடவுள் எப்போதோ கூறினார் என்பதல்ல.மாறாக கொலைக்குப் பலியாகிற நபருக்கும்¸ அவருடைய குடும்பத்தினருக்கும்¸ அவருடைய நண்பர்களிற்கும்¸ அவருக்குப் பரிச்சயமானவர்களிற்கும் இது கொடூர துயத்தை விளைவிக்கிறது என்பதால் கொலை ஒரு தவறான காரியமாகிறது திருட்டு ஒரு தவறான செயல் என்பதற்கு காரணம் 'நீங்கள் திருடக் கூடாது" என்று வேதங்கள் சொல்வதல்ல.மாறாக¸நீங்கள் உங்கள் சொத்தை இழக்கும்போது நீங்கள் அது குறித்து மோசமாக உணருகிறீர்கள் என்பதால் திருட்டு ஒரு தவறான காரியமாகிறது. என்று வித்தியாசமாக கோணத்தில்  எழுதுகிறார் நூலாசிரியர்.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மனித குலத்தை எதிர்காலத்தில் எவ்வாறெல்லாம் ஆட்டிப் படைக்கப் போகிறது என்பதை முன்னறிவிப்பதே இந்நூலின் நோக்கம்.இப்போதே தானியங்கி கார்கள் வந்துவிட்டன அதனால் சாரதிகளின் நிலைமை என்னவாகும்..? மருத்துவம்¸ பொறியியல்¸ இலக்கியம்¸ பொழுதுபோக்கு என அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் புகுந்து கொள்ளும் போது மனிதர்கள் என்ன செய்வார்கள்..? எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை விபரிக்கிறது இந்நூல்.

இந்தப் புத்தக்தில் சில கேள்விகளை முன்வைக்கிறார் நூலாசிரியர்.

  • ஹோமோ சேப்பியன்ஸ் ஹோமோ டியஸாக இந்த நேரத்தில் நமக்கு நாமே எத்தகைய தலைவிதிகளை நிர்ணயித்துக் கொள்ளப் போகிறோம்..?
  • பரிமாண வளர்ச்சியின் முதன்மை ஆற்றலான இயற்கை தேர்ந்தெடுப்புச் செயல்முறையின் இடத்தைச் செயற்கைத் தேர்ந்தெடுப்புச் செயன்முறை எடுத்துக் கொள்ளும்போது மனித குலத்தில் எதிர்காலம் எவ்வாறு அமையும்..?
  • நம்முடைய விருப்பங்களையும் அரசியல் தேர்ந்தெடுப்புக்களையும் பற்றி நம்மை விட அதிகமாக கூகுளும்¸ முகநூலும் தெரிந்து வைத்திருக்கும்போது ஜனநாயகத்தின் நிலை என்னவாகும்..?
  • கணணிகள் மனிதர்களின் கவலைகளைப் பறித்துக் கொண்டு 'பயனற்ற வர்க்கம்'என்ற புதிய மிகப் பெரிய வர்க்கத்தை தோற்றுவிக்கும்போது அரசின் மானிய உதவியோடு வாழும் மக்களை உள்ளடக்கிய நாடுகளிற்கு என்ன நேரும்..?
  • நம்முடைய சொந்த சக்திகளிடமிருந்து இந்த மென்மையான உலகத்தையும் ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் நாம் எவ்வாறு பாதுகாப்போம்..?
இதற்கான விடைகளை சுவாரசியமாகவும் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அவரே முன்வைக்கிறார்.

வரலாறு எதிர்காலம் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களிற்கு  இந்நூல் விருந்தாக அமையும். வாசியுங்கள்.

ஹோமோ டியஸ்

ஹோமோ டியஸ் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்

You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post