.

பூமியில் சிலகாலம் தங்கியிருந்தார் கடவுள்.அவரிடம் 'எனக்கு அது வேண்டும்.இது வேண்டும் என்று எதையாவது கேட்டுக் கொண்டே இருந்தனர் மக்கள்.சலித்துப் போன கடவுள் எத்தனையோ இடம் மாறினார்.கடைசியாக ஒரு முடிவு செய்தார்.மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே அது.தேவர்களிடம் கருத்து கேட்டார்.'இமயமலைக்குச் சென்று விடுங்கள் என்றனர் சிலர்.'அங்கு மனிதர்கள் எளிதாக வந்து விடுவார்களே.' 'நிலாவிற்குச் செல்லுங்கள்' என்றனர் வேறு சிலர்.'எப்படியாவது அங்கும் வந்து விடுவார்கள்.ஒரு நிரந்தரத் தீர்வு சொல்லுங்கள்' என்றார் கடவுள். அவர்களின் ஆலோசனை எதுவும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லை. கடைசியாக ஞானி ஒருவர் யோசனை தெரிவிக்க கடவுளின் முகம் மலர்ந்தது.'யாரும் கண்டு பிடிக்க முடியாத இடம் மனிதனின் மனம் மட்டுமே'..


நீதி-கடவுளை வெளியில் தேடாதே.உங்கள் மனதிற்குள்தான் கடவுள் வாழ்கிறார்.

Post a Comment

Previous Post Next Post