.

ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது.அந்த வழியாக வந்த ஒரு சிட்டுக் குருவி மரத்திடம் கேட்டது'மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா" என்றது.

முதலில் இருந்த மரம் முடியாது என்றது.அடுத்த மரத்திடம் கேட்டது அனுமதித்தது.

குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம்¸அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச் சென்றது.தண்ணீரில் இழுத்துச் செல்லும்போது குருவி சிரித்துக் கொண்டே 'எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறாய்" என்றது.

அதற்கு மரம் கூறிய பதில் 'எனக்குத் தெரியும் நான் வலுவிழந்து விட்டேன்.எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன்.தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவேன்.நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் உனக்கு இடம் இல்லை என்றேன்.மன்னித்து விடு" என்றது.

நீதி-உங்களை யாரும் நிராகரித்தால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள்.

Post a Comment

Previous Post Next Post