.

2000 தூர வெறித்த பார்வை

20ம் நூற்றாண்டின் சிறந்த படைப்புக்களில் ஒன்றான ஓவியர் டொம் லீயின் ஓவியம்தான் இது.2ம் உலகப்போரின்போது பெலீலியு போரில் பங்கு கொண்ட ஓர் அமெரிக்க போர் வீரனின் வெறித்த பார்வைதான் அது.அதே வெறித்த பார்வையை ஒரு ஜப்பானிய வீரனின் முகத்திலும் ஒரு ஜேர்மனிய¸பிரெஞ்சு¸ரஸ்யா¸ஆங்கில வீரர்களின் முகத்திலும் உங்களால் பார்த்திருக்க முடியும்.இவ்வளவு ஏன் 21ம் நூற்றாண்டில் நிகழ்கிற தற்போதைய காலகட்டத்தில் நிகழ்கின்ற நடப்பாண்டில் கூட உங்களால் உணர முடியும்.

போர் எந்த இடத்தில் நிகழ்கிறது என்பது ஒரு பொருட்டல்ல.ஏனெனில் அது எங்கு நடந்தாலும் அது நரகம்தான்.எம் நாட்டில் நடைபெற்ற 30 வருடப் போர் தொடங்கி இன்றைக்கு உக்ரேன்-ரஸ்யா இடையிலான போர் வரை போர் என்பது நரகம்தான் என்பதை எமக்கு நிரூபிக்கிறது. குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து விலையுயர்ந்த தேநீரை அருந்திக் கொண்டு முடிவுகளை எடுப்பவர்களிற்கு களத்தில் போராடும் வீரர்களினதும் துன்பப்படும் மக்களினதும் எந்தவொரு கஸ்டமும் தெரிவதில்லை.எந்த தேவதைகளும் அதை ஆசிர்வதிப்பதில்லை.

போரின் அர்த்தம்¸வியூகம் சார்ந்த நடவடிக்கைளிருந்தோ அல்லது தெய்வீகப் பிரகடனங்களிலிருந்தோ முளைக்கவில்லை.போரை நீங்கள் புரிந்து கொள்ள விரும்பினால் தளபதியைப் பார்க்காமல்¸ சாதாரண சிப்பாய்களின் கண்களை நேராகப் பாருங்கள்.லீயின் இந்த ஓவியத்தில்¸அதிர்ச்சியடைந்துள்ள ஒரு வீரரின் வெறித்த பார்வை¸போர் பற்றிய கொடூரமான உண்மையை லேசாகத் திரை விலக்கிக் காட்டுகிறது. இந்தப் போர்க்களத்திற்கு மேலே எந்தத் தேவதைகளும் பறக்கவில்லை.எந்தக் கடவுளரும் ஆசிர்வதிக்கவில்லை.யுத்த டாங்கிகளும் மயக்கமடைந்துள்ள அல்லது கொல்லப்பட்ட வீரரொருவரும் எதிர்காலம் சூனியமாகியுள்ள நிலையில் காணப்படும் வீரர்களிருவருமே கண்களில் தென்படுகிறனர்.

போர் எப்போதும்  கொடூரமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.போர் கதாநாயகர்களை உருவாக்கிய காலம் தற்போது இல்லை.போர் என்பது நீங்கள் திரைப்படங்களில் பார்ப்பது அல்ல.அது எப்போதுமே அழிவையும் நாசங்களையுமே கொண்டுவந்து சேர்த்துள்ளது.போரை கதாநாயக பிம்பங்களிலிருந்து பார்க்காமல் சாதாரண சிப்பாயின் மனநிலையிலிருந்து பாருங்கள்.








 

Post a Comment

Previous Post Next Post