#ஞானம்
யார் எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே வராது அந்த துறவிக்கு.அந்த இரகசியத்தை அறிந்து கொள்வதில் ஒரு சிஸ்யருக்கு ஆர்வம்.
துறவி விளக்கினார்.
ஒரு ஏரியில் காலியான படகில் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம்.இப்படி ஒருமுறை தியானத்தில் இருந்தபோது நான் அமர்ந்திருந்த படகை வந்து மோதியது ஒரு படகு.
கவனிக்காமல் மோதியது யார்?என்று கோபமாக கண்களைத் திறந்து பார்த்தால் அது ஒரு வெற்றுப் படகு.காற்றுக்கு அசைந்து அசைந்து வந்து மோதியிருக்கிறது.
என் கோபத்தினை அந்த வெற்றுப்படகிடம் காட்டி என்ன பயன்?
யாராவது என்னைக் கோபப்படுத்தும் போது இதுதான் என் நினைவுக்கு வரும்¸இதுவும் வெற்றுப் படகுதான் என்று அமைதியாகி விடுவேன்....!.
ஞானம் எப்போது வேண்டுமானாலும்¸எங்கே வேண்டுமானாலும் வரலாம்.
Post a Comment