.

இது 1997-ம் ஆண்டு தொடங்கிய யுத்தம். இந்த போரில் எதிரிகளை தாக்க மிகவும் தேர்ந்தெடுக்க பட்ட ஸ்னைப்பர்கள், இரக்கமற்ற வான்வழி தாக்குதல்கள் மற்றும் பல மில்லியன் டொலர் கண்காணிப்பு தொழில்நுட்பம் ஆகியவை பயன்படுத்தப்பட்டது.ஆம் இவையனைத்தும் ஆடுகளை கொல்லத்தான் பயன்படுத்தப்பட்டது.    அது தான் கலாபகோசின்(Galápagos) ஆடுகளின் யுத்தம்.

கலாபகோஸ் தீவு வெறும் 7880 கி.மீ. கொண்ட ஒரு சிறிய தீவு தான் ஆனால் உலகின் மிக அறிய வகை உயிரினங்கள் பலவற்றின் வசிப்பிடமாக உள்ளது.

இது மிகவும் தனித்துவமான ஆமை வகையை சார்ந்தது. இந்த ஆமை இனம் தான் உலகின் பெரிதான ஆமைகளை கொண்டது. சுமார் 200 கிலோ-விற்கு மேல் எடையை கொண்டது. மிக நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய தன்மையை உடையது.இதோ இந்த ஆமையின் பெயர் ஹரியேட்(Harriet), 175 வருடம் உயிர் வாழ்ந்துள்ளது.


மனிதர்களிற்கும் ஆடுகளிற்குமிடையிலான யுத்தம்
Galapagos tortoise



                                    

    

மனிதர்களிற்கும் ஆடுகளிற்குமிடையிலான யுத்தம்
Marine iguana







    
மனிதர்களிற்கும் ஆடுகளிற்குமிடையிலான யுத்தம்
Blue fotted bobby

அந்த அச்சுறுத்தல் என்னவென்றால் ஆடுகள். ஏராளமான ஆடுகள்.இந்த ஆடுகள் மிக வேகமாக பரவி கலாபோகஸ் தாவரங்கள் அனைத்தையும் மிக வேகமாக உண்டு வந்தது. தீவுகளின் பசுமையை அழிப்பதன் மூலம் ஆமைகளின் ஒரே வாழ்வாதாரமான உணவை இந்த ஆடுகள் அழித்துக் கொண்டிருந்தது.இந்த ஆமை இனத்தையே அழிவிலிருந்து காப்பதற்கு உள்ள ஒரே தீர்வு, ஆடுகளை அழிப்பது. எனவே, 1997-களில் சார்லஸ் டார்வின் அறக்கட்டளை மற்றும் கலாபகோஸ் தேசிய பூங்கா இணைந்து அனைத்து ஆடுகளையும் அழிப்பது என முடிவு செய்து இதற்கு Project Isabela என்று பெயரிடப்பட்டது.

விளைவு...?சில வருடங்களிலேயே 90 சதவிகித ஆடுகள் கொல்லப்பட்டது. ஆனாலும் ஒரு சிக்கல். என்ன நடக்கிறது என்று ஆடுகள் புரிந்துகொள்ள தொடங்கிவிட்டன. எனவே அவை மரங்கள் மூடப்பட்ட இடங்களிலும், புதர்களிலும் பதுங்க தொடங்கிவிட்டன.

இதற்கு ஒரு தீர்வைக் கண்டு பிடித்தார்கள்..?ஆடுகள் இயல்பாகவே கூட்டம் கூட்டமாக இருக்கும் ஒரு இனம். கூட்டமாகவே நகரும். இதன் காரணமாக வான்வழி தாக்குதல் இனி உதவாது என்று உணர்ந்த Project Isabela குழுவினர் வேறொரு தந்திரமான யுக்தியை கையாண்டனர்.

அது தான் ஜூடாஸ் ஆடுகள் (Judas Goats). எப்படி புதிய ஏற்பாட்டில் ஜூடாஸ் யேசுவைக் காட்டிக்கொடுத்தது போல, இஸபெல்லா குழுவினர் தனது சொந்த மந்தைகளை காட்டிக் கொடுக்கும் ஜூடாஸ் ஆடுகளை உருவாக்க முடிவு செய்தனர்.ஒரு கலாபகோஸ் ஆட்டைப் பிடித்து, அதில் கண்காணிப்பு கருவியை பொருத்தி மீண்டும் அதை தீவில் விட்டு விடுவார்கள். அந்த ஆடு தான் கருப்பு ஆடு(ஜூடாஸ் ஆடு).

ஜூடாஸ் ஆடு இயல்பாகவே தனது மந்தைக்கு செல்லும். இந்த ஆட்டின் ஒவ்வொரு அசைவையும் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருவார்கள். ஜூடாஸ் ஆடு ஆட்டு மந்தையை திறந்த வெளி பகுதிகளுக்கு கொண்டு வர பழக்கப்பட்டிருக்கும்.மந்தை ஆடுகள் திறந்த வெளிக்கு வந்தவுடன், ஜூடாஸ் ஆட்டை  தவிர்த்து பிற ஆடுகளை சுட்டு கொன்றுவிடுவார்கள்.மீண்டும் இதையே செய்வார்கள். பச்சை துரோகியான ஜூடாஸ் ஆடு.

இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், கலாபகோஸ் தீவிற்கு ஆடுகளை கொண்டுவந்ததே மனித இனம் தான். 1800 முதல் 1970 வரை கடற்கொள்ளையர்கள், தங்களது உணவின் தேவைக்காக இந்த ஆடுகளை தீவிற்கு கொண்டு வந்தார்கள். அது அந்த தீவையே அழித்து விடும் என்று அவர்கள் அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.

இறுதியில் தான் வளர்த்து விட்ட ஒரு மந்தைக் கூட்டத்தை பூண்டோடு அழித்து நாசமாக்கியது மனித இனம்.


Galapagos island


Post a Comment

Previous Post Next Post