.

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் என்னும் புத்தகம் அமெரிக்காவினுடைய மறுபக்கத்தை எமக்கு கோடிட்டுக் காட்டுகிறது. அமெரிக்கா என்னும் உலக வல்லரசு தன்னுடைய நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக என்னவெல்லாம் செய்கிறது செய்து கொண்டிருக்கிறது என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஏனெனில் அவரும் ஒரு பொருளாதார அடியாளாக இருந்தவர்தான்.அதனால் இலகுவாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.அமெரிக்காவிற்காக பொருளாதார அடியாகப் பணியாற்றினாலும் இவர்களிற்கும் அமெரிக்க அரசுக்கும் எந்நவிதமான தொடர்புகளும் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் அமெரிக்காவின் சாமர்த்தியம்.

பிரபலமான மெய்ன் நிறுவனத்திற்காக பொருளாதார அடியாளாக பணியாற்றிய பெர்க்கின்ஸ் தன்னுடைய வேலை சம்பந்தமாக தான் அடைந்த,கற்றுக் கொண்டவற்றை புத்தமாக தந்துள்ளார்.அவர் தன்னுடைய ஒப்பந்தத்தை மீறியுள்ளார் என்ற போதிலும் உலகத்திற்கு உண்மையை போட்டுடைத்துள்ளார்.அவர் பொருளாதார அடியாளாகப் பணியாற்றுவது அவருடைய மனைவிக்குக் கூடத் தெரியாதளவிற்கு இரகசியமாக வைக்கப்பட்டிந்தது.

இந்நூல் மூன்று பாகங்களாக காணப்படுகிறது.1961-1971 வரை முதல் பாகமும்¸1971-1981 வரை இரண்டாம் பாகமும்¸1981-2004 வரை மூன்றாம் பாகமுமாக காணப்படுகிறது. ஒவ்வொரு பாகத்திலும் அவர் எதிர்கொண்டவற்றை¸ எப்படி பொருளாதார அடியாளாக உருவாகினார்¸அதன் பின்னரான செயற்பாடுகள் பணத்திற்காக என்னவெல்லாம் செய்யலாம் மனச்சாட்சியைத் துறந்து விட்டு எவ்வாறான வேலைகளில் ஈடுபட்டார் என்பதைத்தான் மூன்று பாகங்களாக பிரித்து தந்துள்ளார்.

பொருளாதார அடியாட்கள் என்பவர்கள் யார் என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் நன்றாகவே கொடுத்துள்ளார் நூலாசிரியர். அவர்களுடைய அந்தப் பணிக்காக பெரும் பணத்தினை அவர்கள் ஊதியமாகப் பெற்றுக் கொள்கிறனர். இப் பூமியின் இயற்கை வளங்களைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் சில பணம் படைத்த குடம்பங்களின் சட்டைப் பைகளிற்கும் கொண்டு சேர்ப்பதுதான் இவர்கள்,வேலை என்றும் இதற்காக மோசமான நிதி அறிக்கைகள்¸தேர்தல் முறைகேடுகள்¸லஞ்சம்¸ பாலியல்¸ கொலை முதலிய கருவிகளைப் பயன்படுத்துகிறனர். பேரரசு எவ்வளவு பழைமையானது என்றாலும் உலகமயமாக்கல் முழுவீச்சில் நடைபெற்று வரும் இன்றை உலகில் பொருளாதார அடியாட்களின் தந்திரங்கள் புதிய பயங்கரமான பரிமாணங்களை உருவாக்கியுள்ளன.

அமெரிக்கா பொருளாதார ரீதியாக தலையிட்ட தேசங்களின் தற்போதைய நிலைமைகள் என்னவென்று தெளிவாக விளக்குகிறார் நூலாசிரியர்.தென்னமெரிக்க நாடுகளில் அமெரிக்க நிறுவனங்கள் என்ன செய்கிறன மக்களின் வாழ்க்கைத்தரம் என்ன நிலையில் இருக்கிறது? அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்கள் மூலம் யாருக்கு நன்மை¸தேசங்களின் கடன் கூடியுள்ளதா..? குறைந்துள்ளதா..?சுற்றுச்சூழல் நிலைமைகள் எப்படி காணப்படுகிறது போன்ற கேள்விகளிற்கான விடைகள் இப் புத்தகத்தில் காணப்படுகிறன.

பொருளாதாரீதியாக கடன் வாங்கிய நாடுகளில் மின்நிலையங்கள்¸ பூங்காக்கள்¸துறைமுகங்கள்¸நெடுஞ்சாலைகள்¸விமானநிலையங்கள் போன்றவை உருவாக்கப்படும்.ஆனால் அவற்றின் கட்டுமானம் அமெரிக்க நிறுவனங்களிற்கே வழங்கப்படவும் வேண்டும்.இதனால் கடன் கொடுத்தவர்களிற்கே பணம் திரும்பி வந்து விடுகிறது. அந்நாடு கடனை வட்டியும் முதலுமாகச் சேர்த்து அடைப்பது சாத்தியமில்லாத ஒன்றாகிப் போகும்.பின்னர் அந்நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளையிடப்படும்.

அமெரிக்கா சில தேசங்களில் தோல்வியடைந்தும் இருக்கிறது அப்படிப்பட்ட தேசங்களில் பொருளாதார அடியாளிற்கு அடுத்ததாக CIA வையும் களமிறக்கியிருக்கிறது ஆனாலும் சில தேசங்களில் வெற்றி கிட்டவில்லை.தன்னுடைய சொந்த நலன்களிற்கு இடையூறாக வரக் கூடிய எந்த நபரையும் தீர்த்துக் கட்ட ஊஐயு தயங்கியதும் இல்லை இனிமேல் தயங்கப் போவதுமில்லை என்பதை இந்நூலின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

வரலாறு தொடர்பாக ஆர்வமிருப்பவர்களிற்கு இந்நூல் மேலும் சுவாரஸ்யத்தை அளிக்கும்.வாசியுங்கள்.





You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post