.

 

பெண்களுக்கெதிரான வன்முறைகள்

பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறிப்பிடப்பட்டுள்ள சீடோ மரபொழுங்கில் காட்டப்படா விட்டாலும், இவ்வகை வன்முறையானது தனிப்பட்ட பொது வாழ்வியல் மட்டத்தில் சமூகத்தைப் பாதிக்கும் ஓர் வன்முறையாக உருவெடுத்து உள்நாட்டு.சர்வதேச மட்டத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெண்கள் தொடர்பாக நடைபெற்ற உலக மாநாடுகள் யாவற்றிலும் பெண்களுக்கெதிரான வன்முறை வன்மையாக கண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக ஐநா சபையினால் பெண்களுக்கெதிரான வன்முறைகளை விசாரணை செய்து கண்காணிக்கும் வகையில் ஓர சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்பட்டார்.பெண்களுக்கெதிரான வன்முறை தொடர்பான சீடோ பிரகடனம் மூன்று வகையான வன்முறைகளை கோடிட்டுக் காட்டியுள்ளது.

1. குடும்பங்களில் பெண்பிள்ளைகள் மனைவி உட்பட அவர்கட்கு அடித்து துன்பத்தல்.பாலியல் ரீதியாக,மற்றும் சீதனம் தொடர்பாக பெண்கள் பாலியல் உறுப்பு துண்டித்தல்

இவைகளுடன்

2. சமூக மட்டத்தில் பாலியல் வல்லுறவு. பாலியல் தொல்லைகள், பாலியல் துஸ்பிரயோகம்.இவை இடம் பெறும். பாடசாலைகள். பெண்கள் பாலியல் தேவைகளிற்காக கடத்தப்படுதல்,வலிந்த விபச்சாரம், 

இவைகளுடன்

3. போர் காலங்களில் அரசின ஆயுதப்படைகளினால் பெண்கள் பாலியல் பலாத்காரகளிற்கு உட்படுதல் யாவற்றையும் கடக்கின்றது.வீட்டு வன்முறை.  மற்றும் பெண்களது பாலியல் உறுப்பின துண்டிப்பு (GenetalMutilation) போன்ற வன்முறைகள் போர் காலங்களில் ஆண்களால் நடத்தப்படும் வேண்டும் என்ற பாலியல் பலாத்காரங்களை இன்று உள்நாட்டு சர்வதேச மட்டத்தில்பெண் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வீட்டு வன்முறை:

வீட்டு வன்முறை ஓர் மனித உரிமை மீறலாகக் கெள்ளப்படுவதில்லை. காரணம் இவை வீட்டில் தனிமையாகவும், குடும்ப உறவோடு இடம்பெறுவதனாலுமாகும்.  இவ் வன்முறை, பெண்கள் இவை பற்றி வெட்கம், பயம் காரணமாக பேசாதிருப்பது அல்லது முறைப்பாடு செய்யாமை காரணமாக வெளியில் தெரியவருவதில்லை.

இலங்கையில் 2005ஆம் ஆண்டில் வீட்டு வன்முறையை ஒழித்தல் தொடர்பான ஓர் சட்டம் கொண்டு வரப்பட்டு. இன்று நடைமுறையில் உள்ளமை வரவேற்கத்தக்க ஓர் மாற்றமாகும். இச் சட்டத்தை மிகப் பலமுள்ள சக்தியாக செயற்பட வைப்பதற்கு பெண்கள் அமைப்புகள், இலவச சட்ட ஆலோசனை அலகுகள் முயன்று வருகின்றன. இன்று பாதிக்கப்படும்  காவல் நிலையங்களிலோ அன்றி மகளிர் அமைப்புக்களின் இலவச சட்டப் பிரிவுகளிலோ மற்றும் அரச இலவச சட்டப் பிரிவுகளிலோ முறைப்பாடு செய்வது அதிகரித்துள்ளது.


குடும்ப வன்முறையும் பெண்களும்

இலங்கையில் குடும்ப வன்முறை குறித்து காலத்துக்குக் காலம் விவாதம் எழுவதுண்டு இந்த விவாதத்தில் ஈடுபடுவோரில் ஒரு தரப்பினர் குடும்ப வன்முறை என்பது அற்பமான விடயம் அதனைப் பெரிது படுத்த தேவையில்லை என வாதிடுகின்றனர். மறு தரப்பினர் இக் குற்றச் செயலின் பாரதூரத் தன்மையை விளங்கிக் கொண்டிருப்பவர்கள் ஆவர்.

இலங்கையில் குடும்ப வன்முறை பற்றிய புள்ளி விபரங்கள் மற்றும் ஏனைய வழிகளில் வரும் தகவல்கள் குடும்ப வன்முறை அதிகளவில் நடைபெறுவதாகவும் இதில் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் எனவும் கூறுகிறனர். இலங்கையில் பெண்களில் 60 வீதமானோர் தமது வாழ்நாளில் ஏதாவதொரு குடும்ப வன்முறைக்கு ஆட்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.எனவே குடும்ப வன்முறை என்பது 'குடும்பச் சூழலுக்குள் பெண்கள் வகிக்கும் பாத்திரம்  காரணமாக குடும்பத்துக்குள்ளேயே அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை அல்லது நேரடியாகவும், எதிர்மறையாகவும் அவர்கள் மீது பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் குடும்பத்துக்குள்  மேற்கொள்ளப்படும் வன்முறை ஆகும்.

இலங்கையில் குடும்பங்களில் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும். வன்முறைகள் அவர்களது உயிருக்கு ஆபத்தைத் தருவதோடு  நீண்டகால தீங்குகளையும் ஏற்படுத்துகின்றன என அறிக்கையிடப்பட்டுள்ளன.இந்த அறிக்கைகளின் படி பெண்களின் கரங்களின் துண்டிக்கப்பட்டுள்ளன. உடலில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன,ஊனமாக்கப்பட்டுள்ளனர்,பழிவாங்கப்பட்டுள்ளனர்.நம் நாட்டில் சிறு குடம்பச் சச்சரவுகளை கவனிக்கப் பல ஏற்பாடுகள் உள்ளன.பொலிஸ்¸இணக்க சபைகள்¸பிரதேச சபைகள்¸ குடும்பத்திலுள்ள மூத்தோர்¸சமயத் தலைவர்கள் ஆகியோர் குடும்பச் சச்சரவுகளைத் தீர்த்து வைக்க முயல்கின்றனர்.இதில் பல பிரச்சனைகள் உள்ளபோதும் இவர்களின் சேவைகள் பெறுமதியானவைகளாகும்.இவர்கள்  சிறு சச்சரவுகளைத் தீர்த்து குடும்பத்துக்குள் வேறுபாடுகளைக் களைந்து சமரசத்தை ஏற்படுத்துகின்றனர்.

குடும்ப வன்முறைகளைத் தடுப்பதற்கு உருவாக்கப்பட்டசட்டங்கள் கணவன்,மனைவிக்கிடையிலான வன்முறைக் குற்றங்களைக் கருத்தில் கொள்கின்றன. எமது சமூகத்தில் எமது சமூகத்தில் குடும்பமே மிகவும் புனிதமான நிறுவனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.ஆனால்  அந்தப் புனிதமான குடும்பத்துக்குள் பெண்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல.

2005 செப்ரெம்பர் மாதத்தில் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை குடும்ப வன்முறை என்பது இலங்கையைப் பொறுத்தவரை கண்ணுக்குத் தெரியாத ஒன்றாகவே இருந்தது. இது சமூகத்தினால் ஏற்கப்பட்டதாகவும் அரசினால் கண்டு கொள்ளப்படாததாகவுமே இருந்து வந்தது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை வரலாற்றில் முதன் முதலாக 'குடும்ப வன்முறை" என்பது குற்றமாகவும் இக் குற்றத்திற்கெதிரான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இலங்கையில் குடும்ப வன்முறை தொடர்பான சட்டம் இரு பரிமாணங்களைக் கொண்டு ள்ளது.இவற்றில்

  1.  குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்.
  2. குற்றவியல் கோவை 2005ம் ஆண்டு 34ம் இலக்க குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம்.

பாதிக்கப்பட்டவர்களிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குகின்றது. இச்சட்டத்தின் படி குடும்பு வன்முறைக்கு ஆளான ஒருவர் நீதிமன்றத்திடமிருந்து ஒரு பாதுகாப்புக் கட்டளையைப் பெற்றுக் கொள்ள முடியும். மேற்படி சட்டத்தில் குடும்ப வன்முறை என்ற அடிப்படையில் ஒரு நபருக்கு இழைக்கக் கூடிய உடல் சார் வன்முறைகள் விபரிக்கப்பட்டுள்ளன. குற்றவியல் கோளையின் அடிப்படையில் குடும்ப வன்முறையை இழைக்கும் ஒருவருக்கெதிராக அரசு வழக்குத் தொடர முடியும்.

குடும்ப வன்முறை ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பினும் பால்நிலை கூட பால்நிலை சார்ந்த பெண்களின் அடையாளங்கள், வகிபங்குகள் மற்றும் நடத்தைகள் அத்துடன் அவை தொடர்பான சமூக எதிர்பார்ப்புகள் காரணமாக இப் பிரச்சினைக்கு முகங்கொடுப்பது சிரமமாகவே உள்ளது.பெண்கள் எதிர் நோக்கும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள்,நீதி,பாதுகாப்பு மற்றும் சமூகமாக்கலுக்கு வாய்ப்பும் ஆதரவின்மை பற்றி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணாமாகவே குடும்ப வன்முறையின் பாரதூரத் தன்மை குறைக்கப்படுகின்றது.பாதிக்கப்படும் பெண்கள் வன்முறை பற்றி முறையிடவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் முடியாமல் உள்ளனர்.

சில பெண்கள் தம்மீது இழைக்கப்படும் வன்முறை பற்றிய விபரங்களை தமது குடும்ப உறவினர் மற்றும் பெண்கள் நிறுவனங்கள், சமய நிறுவனங்களுக்கு வெளிப்படையாகச் துணிகிறனர்.இவர்கள் இலங்கையின் நீதி முறையினால் பல்வேறு விதமாக நடத்தப்படுகின்றனர்.இலங்கையின் நீதி மன்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பும் குற்றமிழைப்பவர்களுக்குத் தண்டனையும்  வழங்குகின்றனர். உண்மையில் பெண்களை வன்முறையிலிருந்து பாதுகாத்து குடும்பங்களில் ஏற்படக்கூடிய வன்முறைச் சூழ்நிலைகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வகையில் அவர்களை வலுப்படுத்தும் பொறிமுறைகள் மற்றும் சட்டங்கள் பற்றி நாம் கவனத்தில் கொள்வது முக்கியமானது.


குடும்ப வன்முறைச் செயற்தடுப்புச் சட்டத்தின் பொருத்தப்பாடு

அமைதி. ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான கடப்பாடு என்பது சட்டங்களின் மீதான பாரிய கடப்பாடொன்றாகும். இந்நோக்கத்தை எய்தும் வகையில் வன்முறைகள் அற்ற சமூகம் ஒன்றை உருவாக்கச் சட்டங்கள் ஆவன செய்தல் வேண்டும். வன்முறைகள், அவை சமூகத்தின் எந்த மட்டத்தில் எழுவதாயிருப்பினும் அவற்றின் எதிர்மறை விளைவுகளிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்தலிற்கான பொறுப்பு சட்டங்களிற்கு இருக்கின்றது.வன்முறைகளை வேரோடு களைவதிலும், முளைவிட்டவற்றை இடைக்களைதலிலும் சட்டங்கள் எதிர்நோக்கக்கூடிய பாரிய சவால்கள் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இன்று உணர்த்தப்பட்டிருக்கின்றது.

குடும்ப மட்டங்களில் நிலவுகின்ற புரிந்துணர்வுக்குறைவு அல்லது மந்தகதியிலான புரிந்துணர்வு ஆகியவற்றின் விளைவால் குடும்பங்களிலிருந்து தோன்றுகின்ற பிரச்சினைகள் வன்முறையின் ஆகக்குறைந்த படிநிலையில் இருப்பதை அவதானிக்கலாம். குடும்ப வன்முறைகளானவை அவற்றின் அடிநிலையிலிருந்து வன் முறைப்பட்டியலின் அதியுச்சங்களைத் தொடுதல் நடைபெறக்கூடாதாயின்  குடும்பமட்டங்களிலான வன்முறைகளைத்  தடுக்கவும் பாதுகாக்கவும் சட்டத்தால் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

அங்ஙனம் ஆக்கப்பட்ட சட்டம்தான் 20005ம் ஆண்டின் 4ம் இலக்க குடும்ப வன்முறைச் செயல் தடுப்புச் சட்டம். சட்டத்தால் வரையறை செய்யப்பட்டபடி வீட்டுக்குள்ளே அல்லது வெளியே தனிப்பட்ட முறையில் புரியப்பட்ட செயல் அல்லது உணர்வு ரீதியிலான துஷ்பிரயோகத்திற்காக  ஒருவர் பாதுகாப்புக் கட்டளைக்காக நீதிவான் நீதிமன்றத்திற்கு விண்ணப்பமொன்றைச் செய்வதற்கான உரிமை சட்டத்தின் 2ம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

தகவுடைய ஒருவரால் செய்யப்பட்ட விண்ணப்பம் ஒன்று கிடைத்ததன் மேல்  குடும்ப வன்முறைச்செயல் புரியப்படுவதைத் தடுப்பதற்கான அவசரத்தேவை மற்றும் துன்புற்ற ஆளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அவசியம் என்பவற்றைக் கருத்திற் கொண்டு  4(2)) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைக்காலக் கட்டளையொன்றை வழங்குவதற்கு நீதிவான் தத்துவமளிக்கப்பட்டுள்ளார்.

இங்ஙனம் ஆக்கப்பட்ட இடைக்காலக் கட்டளையானது குடும்ப வன்முறைச் செயல் எதையும் புரிவதிலிருந்து பிரதிவாதியைத்தடை செய்வதாய் அமையும் நிபந்தனைகளைக் கொண்டதாய் அமைவதோடு குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்புக் கட்டளையொன்று அறுதியாக வழங்கப்படும் வரை அமுலில் இருக்கும் (5(3)}.

அதன்பின் பிரதிவாதி ஏதேனும் குடும்ப வன்முறைச் செயல் புரிவதைத் தடைசெய்யும் வகையிலும், துன்புற்ற ஆளின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தல் அவசியமாயுள்ள சூழ்நிலையிலும் நீதிமன்றத்தால் 12மாதங்களை விஞ்சாத காலப்பகுதிக்கு அமுலில் இருக்கக்கூடிய வகையிலும் பாதுகாப்புக் கட்டளை ஒன்றை நீதிமன்றம் ஆக்கமுடியும் (பிரின் 101)

உலகில் ஒவ்வொரு நாட்டினதும் அடிப்படைக் கட்டமைப்பானது ஒரே மாதிரியாக இருக்கும் என்ற நினைப்பு சாத்தியமில்லாக் கற்பனையே அந்தந்த நாட்டின் கலை. கலாசார, பொருளாதார பண்பாடு மற்றும் இன்னோரன்ன அதன் விழுமியங்களுக்கமைவாகவே அமைக்கப்பட்டிருக்கும். அந்தந்த நாட்டின் இயல்புகளுக்கும். தேவைகளுக்கும் அரசின் பணிகளும் வகுக்கப்பட்டடிருக்கும் இந்தவகையில் இந்த வகையில் மேலைத்தேய நாடுகளின் அரசியல் அமைப்பிலும் கட்டுமானத்திலும் கீழைத்தேய நாடுகள் கணிசமான வேறுபாட்டைக் கொண்டுள்ளன.நாடுகளின் அரசியல் கட்டமைப்பிற்கும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறது.வேறேதேனும் வன்முறையைத் தடுப்பதற்கென ஆக்கப்பட்ட சட்டமொன்றின் விடயத்தில் நாட்டின் கட்டமைப்பை பின்னணியில் வைத்து ஆராய வேண்டிய தேவை பெருமளவில் எழாது. ஆனால் குடும்ப வன்முறைத் தடுப்புச்சட்டத்தைப் புறந்தள்ளி விட்டு கண்மூடித்தனமாக அச்சட்டத்தை அமுல்ப்படுத்த முயன்றால் பாரதூரமான சமூகப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் சமூக அலகென்ற அடிப்படையில் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கான கடப்பாடானது 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் அரசகொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகள் உறுப்புரை 27 (12)ன் கண் அரசின் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவே குடும்பங்கள் சிதைவடையாமல் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசிற்கான வழிப்படுத்தலாக உள்ளது.வழிகாட்டிக் கொள்கையானது சட்டக்கடப்பாடல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப வன்முறை  தடுப்புச்சட்டத்தின் மூலமாக குடும்பங்களில் எழக்கூடிய வன்முறைகளைத் தடுக்கும் குடும்பவன்முறை செயல் தடுப்புச்சட்டத்தைப் பொறுத்தவரை குடும்பவன்முறை முறைப்பாடு செய்வதற்கும்,துன்புற்ற ஆளைத் தொடர் துன்புறுத்தல்களிலிருந்து விடுவிப்பதற்கு வழிசெய்யப்பட்டிருக்கின்றது. சட்டத்தின் 12(1)ஊன் கீழ் எவரேனுமாளுக்கு ஆதாரமளிப்பதற்கு பிரதிவாதிக்கு கடமையொன்றுள்ளவிடத்து அத்தகைய ஆளுக்கு அவசர பண உதவி வழங்குமாறு பிரதிவாதி கட்டளையிடப்படலாம் எனக் கூறப்படினும் பணத்தொகையின் அளவு எத்தகைய காலத்திற்கு முதலில் கேள்விகளிற்கு தெளிவான பதிலில்லை.

குடும்பவன்முறைச் செயல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கணவனின் கொடுமைக்கெதிராக முறைப்பாடு செய்த குடும்பப் பெண்ணொருவர் கணவனின் தலையீடின்றி சட்டத்தால் பிரித்து வைக்கப்படும் குறிப்பிட்டளவு காலப்பகுதியில் அப்பெண் மற்றும் குழந்தைகள் முதலிய தங்கி வாழ்வோரின் அடிப்படைத் தேவைகளிற்கான வழி என்பதற்கு தெளிவான பதில் இல்லை.

குடும்ப வன்முறையொன்றிற்கென முறையீடு செய்த நபரையும் எதிராளியையும் மீள் இணைப்பதில் சட்டம் எவ்வளவு பங்களிப்பை நல்கப்போகின்றது என்பதும் கேள்விக்குறியே. இச்சட்டத்தின் பிரிவு 5(2)(அ)ன் கீழ் திறந்தவர்க்கு ஆலோசனையளித்தல் அவசியமாகவுள்ளவிடத்து அவ்வண்ணம் செய்யும்படி சமூகசேவகர் அல்லது குடும்ப ஆலோசகர் ஒருவருக்கு நீதிமன்றம் கட்டளையிட முடியும் எனக் கூறப்பட்டுள்ள போதும் அவ்வாலோசனை எத்தகையது என்பது பற்றி தெளிவாகக் கூறப்படாமை குறைபாடொன்றே. குடும்ப வன்முறை காரணமாக தொடர்பறுக்கப்பட்ட குடும்பங்கள் ஒரு கட்டத்தில் மீள் இணையும் போது பாதிக்கப்பட்டவரின் வாழ்வாதாரம் என்ற கேள்வி ஒருவழியாய் முடிவுக்கு வருகிறது. மீள் இணைவிற்கான சாத்தியக் கூறுகள் தென்படாத குடும்பங்களை பொறுத்தளவில் வழக்குத்தாக்கல் செய்யப்படின் வழக்கு முடிவில் பராமரிப்புத் தொகைக்கான கட்டளை வழங்கப்படும் வரைக்கும் வாழ்வதற்கு என்ன வழி என்ற நச்சரிப்புத் தொடர்ந்தபடி இருக்கும் விவாகரத்து வழக்கு தொடர்வதிலும், அதற்கான காரணங்களைச் சரியாக முன்வைப்பதிலும்  இறுதியாக சாதகமான தீர்ப்பை பெறுவதிலும் பல சட்டத்தடைகள் இங்கு காணப்படுகிறன.

பெண்கள் வன்முறைகள் தொடர்பான ஆவணங்கள்:

  • பெண்களுக்கு எதிரான சகலவித பாரபட்சங்களையும் ஒழித்தல்  தொடர்பான பிரகடனம்
  • சீடோ பொதுவான சிபாரிசுகள் 
  • நான்காவது பெண்கள் உலக மாநாட்டு அறிக்கை.
  • நான்காவது ஜெனீவா மாநாடு


குடும்பப் பிரச்சினைகள் சந்திக்க வருகின்றபொழுது குடும்பத்தின் அத்திவாரம் கண்டுவிட்டதாய் அர்த்தம் கொள்ளப்படுகின்றது. கீழைத்தேய கலாசாரத்தை மிக இறுக்கமாக ஏற்றுக்கொண்ட இலங்கை மக்களின் பார்வையில் குடும்பப் பிரச்சினைகளிற்கென நீதிமன்றின் படிகளில் ஏறுதல் என்பதும் தங்கள் உறவுகளிற்கெதிராகச் சட்டத்தின் செயற்பாட்டைத் தூண்டிவிடுதல் என்பதுவும் அருவருக்கத்தக்க செயலென எடைபோடப்படுவதோடு சமூக அலகு ஒன்று என்ற அடிப்படையில் அக்குடும்பத்தில் வழங்கப்பட்டு வந்த கௌரவமும் இழக்கப்படுகிறது.

ஆனாலும் கூட விவாகரத்துக் கோரி மாவட்டநீதிமன்றுங்களிற்கு வருகின்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பார்க்கிற பொழுதும், வாழ்க்கைத் துணைக்கு எதிராக மற்றைய துணை துணிந்து சாட்சிக்கூண்டில் ஏறுகின்ற நிகழ்வைப் பார்க்கின்ற பொழுதும் குடும்பப் பிணக்குகள் அம்பலப்படுத்தப்படல் கேவலம் என்பதாக எங்கள் மக்களின் மனங்களிலிருந்து சிந்தனை பாரிய ஆட்டம் கண்டிருப்பதை உணர முடிகிறது. வன்முறைகள் குடும்பங்களுக்குள் வரையறையற்று ஊடுருவியுள்ள இன்றைய காலத்தில் அவை வெளியுலகப் பார்வையிலிருந்து மறைக்கப்படல் என்பது படுமுட்டாள்த்தனமான சிந்தனையாகவே இருக்கும். குடும்ப வன்முறைகள் அம்பலப்படுத்தப்பட்டு உரியவர் தண்டிக்கப்பட்டுவதும் பாதிக்கப்பட்டவர் நிரந்தர தீர்வு பெறாவதும் அவசியம் செய்யப்பட வேண்டிய செயலாகும்.

ஆனால் குடும்ப வன்முறைச் செயல் தடுப்புச் சட்டமானது தவறிழைத்தவரை தண்டிப்பதில் செவ்வனே செயற்பட்டு வருகின்றதாயினும் துன்புற்ற ஆளிற்கு நிரந்தரத் தீர்வு வழங்கல் விடயத்தில் சில விடயங்களைக் கவனிக்கத் தவறி இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.உதாரணமாக கணவனின் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவருக்கு பாதுகாப்புக் கட்டளை மூலம் கணவனின் தொந்தரவிலிருந்தும், நச்சரிப்பிலிருந்தும் வேறு பல வழிகளில் ஏற்படக்கூடிய இடர்பாடுகளில் இருந்தும் இச்சட்டம் விடுதலை அளிக்கவல்லதாய் உள்ளது.ஆனால் கணவனின் தொடர்பறுக்கப்பட்ட பெண் சுயமாக தன்னைப் பராமரிக்கும் இயலுமையைக் கொண்டிராதவிடத்து அவளின் எஞ்சிய வாழ்காலத்திற்கு யாது வழி என்ற விடயத்தில் சட்டம் பதிலற்றுக்கிடக்கின்றது. மேலைத்தேய நாடுகளில் இங்ஙகனம் கட்டறுக்கப்பட்ட குடும்பஅங்கத்தவர்களின் நலன் கருதி சமூகம் பாதுகாப்பு (Social security) எனும் விசேட திட்டம் உள்ளது. இதன்படி முறிந்த குடும்பங்களிலுள்ள தேவை மிகுந்த அங்கத்தவர்களுக்கு உதவிப்பணம் வழங்குவதோடு வாழ்வதற்கான நம்பிக்கையும் உத்தரவாதத்தையும் தருகின்றது.

இலங்கையைப் பொறுத்த வரை சமூகநல அரசு என்ற தன்மையை பொருளாதார நெருக்கடி வளப்பற்றாக்குறை என்பதன் பிரதான காரணங்கள் எனவே இத்தகைய முறிந்த குடும்பங்கள் தொடர்பில் அவற்றின் பாதுகாப்பிற்கென அரசால் நிதியுதவி முதலில் காத்திரமான பங்களிப்பை செய்ய முடியாது என்பது நிதர்சனம் பொருளாதார நெருக்கடி. வளப்பற்றாக்குறை என்ற மன்னிப்புக்களை முன்னிறுத்தித்தான் பொருளாதார,சமூக,கலாசார உரிமைகள் எமது அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. அத்தியாயம் 3ல் அடிப்படைக் குடியியல் அரசியல் உரிமைகள் மாத்திரமே உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளன.

பிணக்குகள் எழுந்த குடும்பங்கள் மீள் இணைக்கப்பரும் வரையில் இணைதலிற்கான சந்தர்ப்பங்கள் இல்லாது போகும் தறுவாயில் அவர்களின் வாழ்காலத்திற்கென சமூக பாதுகாப்பு முதலில் எத்தகைய உத்தரவாதத்தையும் வழங்க முடியாத சட்டத்தால் பிணக்குகளை முறைப்பாடு செய்தலிற்கும் தவறிவித்தவரை  தவறிழைத்தவரை தண்டனைக்குள்ளாக்குவதற்கும் ஏற்பாடுகள் இருப்பினும் யாதொரு பயனும் விளையப் போவதில்லை.


ஐ.நா பாதுகாப்பு சபைத் தீர்மானம் 1325 (200)

இவ்வுரிமை தொடர்பான ஆவணங்கள்:

  • உலகளாவிய மனித உரிமைகள் சாசனம், உறுப்புரை (2.3.5.16.25)
  • குடிசார் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனம் உறுப்புரை(2.6.7.917,23)
  • சீடோ பொதுச் சிபார்சுகள்
  • சீடோ சிபார்சுகள் இல21)
  • சிறுவர் உரிமை தொடர்பான மரபொழுங்கு உறுப்புரை 16.16.19.24.34.37)
  • சகலவிதமான பாரபட்சங்களை ஒழித்தல் தொடர்பான சர்வதேச மரபொழுங்கு உறுப்புரை(5)
  • குடித்தொகை மற்றும் அபிவிருத்திதிட்ட செயற்பாடுகள் தொடர்பான சர்வதேச மரபொழுங்கு
  • நான்காவது பெண்கள் உலக மாநாடு செயற்றிட்டம். பந்திகள்.(89-130,259-285)


பெண்களிற்கு எதிரான வன்முறைகள்















 


Post a Comment

Previous Post Next Post