.

தோற்கடிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து கௌரவன் எழுதப்பட்டுள்ளது.துரியோதனன் தோற்றுப் போனாலும் அவன் பக்கமும் நியாயம் இருந்தது.ஒவ்வொருவரும் தாங்கள் செய்வதே தர்மம் என்று எண்ணிக் கொள்கிறனர்.

நாமறிந்த மகாபாரதம்,குருச்சேத்திரப் போரில் வெற்றியடைந்த பாண்டவர்களின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட ஒரு கதை. எல்லா வழிகளிலும் நயவஞ்கமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்த தங்கள் பக்கக் கதையை எடுத்துரைக்க வருகிறான் ‘கௌரவன்’ துரியோதனன்.

பரதகண்டத்தின் சக்திமிக்கப் பேரரசு ஒன்றில் ஒரு ராஜகுழப்பம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது. குரு வம்சத்தின் ஆட்சிப் பொறுப்பாளரான பீஷ்மர், தன் அரசின் ஒற்றுமையைக் காக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். பார்வையற்ற திருதராஷ்டிரன், அந்நிய நாட்டைச் சேர்ந்த தன் மனைவி காந்தாரியுடன் அரசு பீடத்தில் அமர்ந்திருக்கிறான். இறந்துவிட்ட அவனுடைய தம்பி பாண்டுவின் மனைவியான குந்தி, தன் மூத்த மகன் தர்மனை அரியனையில் அமர்த்தத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

இது ஒரு புறம் இருக்க,

அதே அஸ்தினாபுர அரணமனைத் தாழ்வாரங்களில் பரதகண்டத்தை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறான் ஒர் அந்நிய நாட்டு இளவரசன். அவன் உருட்டிய பகடைகள் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஆணிவேரையே ஆட்டம் காணச் செய்து கொண்டிருக்கின்றன.

மஹாபாரதக் கதையை முற்றிலும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகியிருக்கிறார் நூலாசிரியர். நாமறிந்த மஹாபாரதம் எமக்குச் சொல்லப்பட்ட விதத்தை வைத்தே நாம் அறிந்தது அதாவது பாண்டவர்கள் நல்லவர்கள் கௌரவர்கள் தீயவர்கள் அதர்மத்தின் வழி நடப்பவர்கள் என்று காலமகாலமாக போதிக்கப்பட்டு வந்துள்ளது.இதனை முற்றிலும் உடைத்தெறிகிறார் நூலாசிரியர்.அப்போதைய காலகட்டத்திலேயே சாதிய வெறி குடிகொண்டிருந்த அந்த நேரத்தில் அனைவரும் சமம் என்ற கொள்கையை கொண்ட இளவரசன் துரியோதனன் மற்றவர்களால் குறிப்பாக பிராமணர்களால் தூற்றப்படுகிறான்.பிராமணர்கள் தாங்கள்தான் கடவுளின் நேரடி தூதுவர்கள்போல் நடந்து கொள்கிற அப்போதைய காலகட்டத்தில் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஒருவனின் தகுதியை தீர்மானிக்க முடியும் என்றுரைத்த துரியோதனன் தீயவனாக சித்தரிக்கப்படுவதில் ஆச்சரியமில்லைத்தான்.

சூத்திரர்களை தீண்டத்தகாதவர்களாக கருதிய அப்போதைய காலகட்டத்தில் கர்ணனுக்கு அங்க தேசத்ததையும் மற்றொரு சூத்திரனான ஏகலைவனுக்கு காடுகளிற்கு அரசனாக்கி தன்னுடைய நண்பர்களாக்கி வைத்துக் கொண்ட மாபெரும் புரட்சியாளன் துரியோதனன்.கார்ல்ஸ் மார்க்ஸ்க்கு முன்பே பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டிருந்த மேதை என புழழ்கிறார் நூலாசிரியர்.

ஒருமுறை தீண்டத்தகாதவர்கள் எனக் கருதப்பட்ட மூதாட்டியிடம் கள்ளை வாங்கி குடித்துவிடுகிறான் துரியோதனன்.அனைவரும் அடுத்து என்ன நடக்குமோ என பயத்துடன் இருக்க அவளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிச் செல்கிறான் அவன்.இந்த விடயங்களில் தன்னை அவதாரம் எனக் கூறிக் கொள்ளும் கிருஸ்ணன் கூட துரியோதனனுக்கு கீழேதான்.அவதாரம் என்று கூறிக் கொண்ட கிருஸ்ணன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூக நீதி¸சமத்துவம் என்பன பற்றி அக்களை கொண்டதாக தெரியவில்லை. இந்நூலில் 16008 மனைவியரை வைத்திருத்ததற்காக கிருஸ்ணனை விரும்பிய ஒரு கலாச்சாரத்தில் தன் மனைவிக்கு விசுவாசமாக நடந்து கொண்ட துரியோதனன் நகைப்பிற்குரியவனாக கருதப்பட்டான்.ஆணாதிக்கம் நிலவிய அந்தக் காலகட்டத்தில் பெண்களை போகப் பொருளாகவும் ஆண்களின் சொத்தாகவும் கருதிய நிலையில் எத்தனை மனைவியரை வேண்டுமானாலும் அரசன் வைத்துக் கொள்ளலாம் என்ற நிலைமை காணப்பட்ட போதிலும் துரியோதனன் பாண்டவர்களை விட மேம்பட்டே காணப்படுகிறான்.தன் மனைவி பானுமதியை விட அவன் வேறு பெண்களை வைத்துக் கொண்டதில்லை.ஆனால் ஒரு கௌரவ புத்திரன் அதனைப் பற்றி ஆழமாக யோசித்தான்.அதனால்தான் அவன் தீயவனாக தூற்றப்படுகிறான்.

துரியோதனன் தன் நண்பர்களை பெரிதும் நேசித்தான். கர்ணன்¸அசுத்தவாமன்¸ஏகலைவன் என தன் நண்பர்களை சந்தேகத்திற்கிடமின்றிவிரும்பினான். நட்பிற்கு இலக்கணமாக அவனுக்கும் கர்ணனுக்கமிடையேகாணப்பட்ட ஆழமான நட்பையே இன்றும் சொல்கிறார்கள்.

இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கும் கௌரவன் நூலானது நிச்சயமாக துரியோதனன் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதைகளை தவறான விம்பங்களை உடைத்தெறியும்.நிச்சயமாக வாசியுங்கள். நீங்களும் அதை உணர்வீர்கள்.

கௌரவன் புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.


கௌரவன்
முதல் பாகம் 

கௌரவன்
இரண்டாம் பாகம்



You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post