.

குளிர் நிரம்பிய பொழுதொன்றில், காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது.

புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர், "என்ன பார்க்கிறாய்" என்று கேட்டார்.

“எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்".

சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி, புழுதி படிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி, பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார்.

தான்தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி, "நான் யார் தெரியுமா!" என்றார்.

சிறுவன் சொன்னான்.

"தெரியுமே! நீங்கள்தான் கடவுளின் மனைவி!!"

*கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்"

கடவுள் ஒரு குட்டிக்கதை


Post a Comment

Previous Post Next Post