நாகரிகங்களின் மோதல் என்னும் சாமுவேல் பி.ஹண்டிங்டன் எழுதிய இப் புத்தகம் உண்மையில் உலக நிகழ்வுகள் பற்றிய எதிர்வு கூறல்களாகும்.1993 இல் வெளியிடப்பட்டிருந்தாலும் தற்போதைய உலக நடப்புக்களை சரியாகவே கணித்துள்ளார்.உதாரணமாக சொல்வதென்றால் உக்ரேன்-ரஸ்யா இடையே ஒரு மோதல் நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக் கூடுமென்பதை எதிர்வு கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் நடக்கப்போகும் போர்கள் நாடுகளிற்கிடையில் அல்ல¸கலாச்சாரங்களிற்கிடையில்தான் இருக்கும்¸அதில் குறிப்பாக இஸ்லாமிய கலாச்சாரம் முக்கிய வினையாற்றும் என்று வாதிடுகிறார்.இன்றைய உலகின் குழப்பங்களை மறுவரையறை செய்கிறது இந்நூல்.
நாகரிகங்களின் மோதல் உண்மையில் அறிவுசார்ந்த புத்தகமாகும். வாசிக்கும் போது ஆரம்பத்தில் கொஞ்சம் சுவாரஸ்யமாக செல்லாவிட்டாலும் மேலும் வாசித்துக் கொண்டு செல்லும்போது நூலின் ஆழத்தையும் சுவாரஸ்யத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. நாகரிகங்களை நூலாசிரியர் குறை சொல்லவில்லை.
யதார்த்தத்தை போட்டுடைத்துள்ளார். அரசியல்ரீதியாக விழிப்புணர்வு பெற்றுள்ள இன்றைய உலகில் நமது பல்வேறுபட்ட நாகரிகங்கள் பற்றிய பிரக்ஞையின் கூட்டிணைவு ஒன்றை நம்புகிறோம்.
அளவுக்கதிகமாக அணு ஆயுதங்களைச் சமாளிப்பதற்கு இவையே தேவைப்படுகின்றன. நாடுகளிற்கிடையிலான உறவுகளையும்¸ பகுத்தறிவு மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த இத்தகைய நாகரிகங்களுக்கூடான கூட்டிணைவுகளைத்தான் நம்புகிறோம்.
பனிப்போர் முடிவடைந்த பிறகு கலாச்சாரம் என்பது ஒரே சமயத்தில் பிளவுபடுத்துவதாகவும் ஒன்றிணைப்பதாகவும் காணப்படுகிறது. கலாச்சாரத்தல் ஒன்றுபட்ட மக்கள் ஒன்று சேர்வதையும் வரலாற்றுச் சூழலால் ஒன்றுபட்ட ஆனால் கலாச்சாரத்தால் வேறுபட்ட சமூகங்கள் பிரிகிறன அல்லது பல நாடுகள் மிகத் தீவிரமான அழுத்தத்துக்கு உள்ளாகிறன என்று வாதிடுகிறார் நூலாசிரியர் அதற்கு பல்வேறு உதாரணங்களையும் காட்டி எழுதியுள்ளார். அவ் உதாரணங்கள் ஏற்கும்படியாகவே காணப்படுவதுதான் சிறப்பு.பூகோள அரசியலைப் பற்றிய தெளிவான பார்வை நூலாசிரியரிடம் நன்றாகவே காணப்படுகிறது.
நாகரிகம் என்றால் என்னவென்பதை வரைவில க்கணப்படுத்துவதுடன் உலகில் முக்கியமான நாகரிகங்கள் பற்றி அலசி ஆராய்கிறார்.நாகரிகங்களின் தோற்றுவாய் எது¸எங்கு என்பதை விரிவாக ஆராய்வதுடன் நாகரிகங்களின் இயல்பு களினையும் அலசி ஆராய்ந்து செல்கிறது இந்நூல்.நாகரிகங்களின் இயல்புகளை வகைப்படுத்திக் கொள்கிறது இந்நூல்.சமகாலத்தில் முக்கியமான சீனிய¸ ஐப்பானிய¸ இந்து¸ இஸ்லாமிய¸ மேற்கத்திய¸ இலத்தீன்¸ ஆபிரிக்க அமெரிக்க நாகரீகங்களினைப் பற்றி விரிவாக அலசி ஆராய்கிறார் நூலாசிரியர். நாகரிகங்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி என்பனவும் அலசப்படுகிறது.எந்தவொரு நாகரிகங்களும் எப்போதுமே எழுச்சியுற்றே இருந்தது கிடையாது .எழுச்சியும் வீழ்ச்சியும் வரலாறு நெடுகிலும் தொடர்ந்தே வந்துள்ளது.
எந்தவொரு கலாச்சாரம் அல்லது நாகரிகத்திற்கும் மையக்கூறுகள் மொழியும் மதமும் ஆகும்.நவீன உலகத்தில் பொதுவாக ஆங்கிலம் பேசுவோரின் சதவீதம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்ல மாண்டரின் மொழி பேசுவோரின் சதவீதம் குறிப்பிட்ட அளவு உயர்ந்து செல்கிறது.பொதுவாக ஆங்கிலம்¸ மாண்டரின்¸ ஸ்பானிஸ்¸ பிரெஞ்சு¸அரபு¸ரஸ்யன் அகிய மொழிகள் ஏகாதிபத்திய மொழிகளாக இருந்துள்ளன.இன்றைக்கும் இருக்கிறன.அவை பிற மக்கள் தங்கள் மொழியைப் பயன்படுத்துவதை மேம்படுத்தின.குடியேற்ற நாடு களைக் கொண்டிருந்த நாடுகளிற்கு அவர்களின் மொழியைப் பரப்புவதில் மேம்படுத்துவதில் கணிசமான வெற்றியைப் பெற்று ள்ளனர்.ஆனால் குடியேற்றங்கள் விலக்கிக் கொள்ளப்பட்ட பின் உள்ளுர் மொழிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
பனிப்போருக்குப் பின்னரான சமூகங்களில் மேற்குமயமாதல் அதிகரித்துள்ளது.மேற்கின் விரிவாக்கம் மெற்கு அல்லாத சமூகங்களில் நவீன மயமாக்கம் ஆகியவற்றை மேம்படுத்தியுள்ளது. இந்த சமூகங்களின் அரசியல்¸அறிவார்ந்த தலைவர்கள் இந்த மேற்க த்தியத் தாக்கத்திற்குப் புறக்கணிப்புவாதம்¸கமாலியம்¸ சீர்திரு த்தவாதம் அகிய வழிகளில் எதிர்வினை புரிந்துள்ளனர்.இதை நூலாசிரியர் தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறார்.
மேற்கத்தைய நாகரிகம் எவ்வாறு உலகளாவிய ஆதிக்கத்தைப் பெற்றது தற்போதும் பெற்றுள்ளது என்பதை விரிவாக ஆராய்கிறது இந்நூல். 1920ல் உலக நிலப்பரப்பில் 48 சதவீதம் மேற்கின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் படிப்படியாக குறைவடைந்தது. தற்போது மேற்கு அல்லாத சமூகங்களின் புத்தெழுச்சி பற்றியும் விவாதத்தை தூண்டுகிறது நூல்.
நாகரிகத்திற்குள்ளாக அல்லது அயல் நாகரிகத்திற்கான நடத்தை என்பது வேறாக நினைக்கும் மக்களுடன் கொள்ளும் தாழ்வு மனப்பான்மை¸அம்மக்களிடம் பயம்¸ மொழியியல் வேறுபாடுகள்¸ அம்மக்களில் கருத்துக்ளில் பரிச்சியமின்மை¸ சமூக நடத்தைகள் என்பனவற்றைக் குறிப்பிடுகிறார். இவை நாகரிகங்கிற்கிடையிலான மோதல்களை பெரும்பாலும் தூண்டக்கூடும்.
இஸ்லாமும் மேற்கும் என்ற அலசலில் இவற்றிற்கிடையிலான உறவுகள் எப்போதும் புயல் வீசுபவையாகவே இருந்துள்ளன. இவற்றின் ஆழமான மோதல்களை தாராளவாத ஜனநாயகத்திற்கும் மார்க்கிய-லெனினியத்திற்கிடையிலான மோதலோடு ஒப்பிடுகிறார். இவ் உறவுகள் ஆழமான போட்டி மற்றும் கடும்போர் என்றுதான் இருந்துள்ளது. மேற்கின் வாழ்வைச் சந்தேகத்திற்கு ஆளாக்கிய ஒரே நாகரிகம் இஸ்லாம்தான் அப்படிக் குறைந்தது இரண்டு முறையேனும் நிகழ்ந்திருக்கிறது. 7ம் நூற்றாண்டில் இஸ்லாம் மேலோங்கியிருந்தாலும் 15ம் நூற்றாண்டில் நிலைமை மாறத் தொடங்கியது. அது இன்னமும் தொடந்து கொண்டுதான் இருக்கிறது. வளைகுடாப் போரினையும் அதன் தொடர்ச்சியாகவே மதிப்பி டுகிறார். மேற்கிற்கு அடிப்படைப் பிரச்சனை இஸ்லாமிய அடிப்ப டைவாதம் அல்ல. அது இஸ்லாம்தான்.இஸ்லாத்திற்கு மேற்குத்தான் பிரச்சனை.அவர்களின் மதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் இதுதான் எரியும் மோதலுக்கு அடிப்படை விடயங்கள்.
எதிர்காலத்தில் நாகரிகங்களின் மோதல் எந்த திசையில் பயணிக்கும் என்பதை கிழக்காசியாவில் மையங்கொண்டுள்ள சீனா வல்லராசாக மாறும் போது நிலைமைகள் எவ்வாறு மாறும் மேற்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் ஐப்பான் யார் பக்கம் சேரும் என்பதை பற்றிய எதிர்வு கூறலொன்று இடம்பெற்றுளது இந்நூலில்.இதிலிருந்து தப்பிக் கொள்வற்கு மேற்கு தன்னைப் புதுப்பித்துக் கொள்வது அவசியமாகிறது.
நாகரிகங்களின் மோதலில் ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படுதலின்றி நின்றுபோகும் அல்லது தனித்தனியே நின்று விடும்.வரும் காலத்தில் நாகரிகங்களின் மோதல்கள்தான் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.நாகரிகங்களின் அடிப்ப டையிலான ஒரு சர்வதேச ஒழுங்குதான் உலகப் போருக்கு எதிரான மிக உறுதியான பாதுகாப்பு.
மொத்தத்தில் நாகரிகங்களின் மோதல் பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய அவசியமான புத்தகமாகும்.
Post a Comment