.

அ.லாவண்யா எழுதிய புதுக்காட்டுப்பள்ளங்கள் என்னும் இந்நூல் ஒரு கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது. கவிதை வாசிக்க ஆர்வமுள்ளவர்களிற்கு ஏற்ற நூல். எழுத்தாளரின் கன்னிப் படைப்பாக வெளிவந்துள்ள இக் கவிதைத் தொகுப்பானது அவரின் முதல்நூல் என்று சொல்ல முடியாதளவிற்கு முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பகிர்கிறது.தனிக்கவிதைகளாக வந்திருக்கும் ஒவ்வொரு கவிதைகளும் வாசிப்பின்போது சுவாரசியத்தையும் சந்தோசத்தையும் தருகின்றன. தன்னுடைய சொந்த அனுபவங்களையே கவிதைகளாகத் தந்துள்ளார் நூலாசிரியர்.அறுபது பக்கங்களில்  சிறிய புத்தகமொன்றாக வெளிவந்துள்ளது இந்நூல். அனைத்துமே புதுக்கவிதைகளாக அமைகின்றன. எளிமையான வசன நடையும் வாசிப்பவர்களிற்கு விளங்கிக் கொள்ளக் கூடியதாக எளிமையான கவிதைகளாக வெளிவந்துள்ளது இந்நூல்.

பெண் எழுத்தாளர்கள் குறைவாக உள்ள காலகட்டத்தில் இவரின் புதுவரவானது எழுத்துலகில் தாக்கங்களை ஏற்படுத்;துகின்ற அளவிற்கு எதிர்காலத்தில் அமையப் பெறலாம் ஏனெனில் இந்நூலின் கற்பனை வளம் அளப்பரியது. இவரின் நாற்பத்தாறு கவிதைகளும் இரசிக்கும்படியாக இடம்பெற்றுள்ளன.அது அவரின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.தான் வாழும் சமூகத்தின் நடத்தைகள்¸எண்ணங்களின் வெளிப்பாடுகள்¸ பெண்களின் உணர்வுகள்¸ நட்பின் பெருமைகள்¸ பிற்போக்குத் தனங்களின் பெருமை சுயநலங்கள் போன்றவற்றை கண்ணாடியாக வெளிக் கொண்டு வந்துள்ளார் நூலாசிரியர்.

இந்நூலிலுள்ள என்னைக் கவர்ந்த வரிகள் சில மௌனித்தது என் மொழிகள்தான் என் உணர்வுகள் அல்ல...¸ விழிகளில் உண்மையில்லை விழிநீர் சொரிகிறது முகங்களில் சாந்தில்லை வேடமே தெரிகிறது...¸ துணிந்து செல் உரிமைகளிற்காய் மரணம் உன் உடலுக்கு மட்டுமே உணர்வுகளிற்கு அல்ல...

புதுக்காட்டுப் பள்ளங்கள்



Post a Comment

Previous Post Next Post