பா.இராகவன் எழுதிய டொலர் தேசம் என்ற புத்தகம் 400 வருட வரலாற்றைக் கொண்ட அமெரிக்காவினுடைய மறுபக்கத்தை எடுத்துரைக்கிறது.
அமெரிக்கா என்பதே அதன் பூர்வக் குடிகளான செவ்விந்தியர்களின் இரத்தத்தின் மீதும் அவர்களின் உடல்களின் மீதும் கட்டமைக்கப்பட்டதே நவீன அமெரிக்காவாகும்.தற்போது நாம் அனைவரும் வியந்து பார்க்கும் தேசத்தின் இருண்ட பக்கங்களை அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர்.
அமெரிக்க தேசத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் யுத்தங்களே தீர்மானித்திருக்கிறன.ஆனால் அமெரிக்கா எப்போதும் யுத்தங்களால் பாதிக்கப்பட்டதில்லை.அவர்கள் எப்போதும் முன்னின்று நடத்துபவர்களாகவே இருக்கிறனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை தனக்கு இலாபமில்லாத எந்தவொரு விடயத்திலும் தலையிட்டதில்லை.உறவுகளும் வைத்துக் கொண்ட தேசமுமல்ல.உள்நாட்டு விவகாரங்களில் பங்கு கொண்டதுமில்லை. யுத்தங்கள் தொடுத்ததுமில்லை என்பது அதன் வரலாறு முழுவதும் பரவிக் காணப்படும் உண்மை.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததிலிருந்து இன்றுவரை உலகநாடுகள் அனைத்தும் தன் கட்டளைக்கு கீழ்ப்படியச் செய்யும் வல்லமை கொண்ட தேசமாக ஓர் அச்சுறுத்தும் சக்தியாக இருந்து வருகிறது அமெரிக்கா.வேறெந்த தேசத்திற்கும் இல்லாத அக்கறை அமெரிக்காவிற்கு மட்டும் எதற்கு..?உண்மையில் அது அக்கறைதானா...?இந்தக் கேள்விக்கான விடைகளைத் தெளிவாக விளக்கியுள்ளார் பா.இராகவன்
உண்மையில் இப்புத்தகமானது குமுதம் இதழில் வாரமிருமுறை வெளிவந்த தொடரின் தொகுப்பாகும்.வாசிக்கும்போது சுவாரசியம் குறையாமலும் தொடர்ந்து வாசிக்க ஆவலைத் தூண்டுகிற புத்தகமாக அமைந்துள்ளது டாலர் தேசம்.
எம் கனவு தேசத்திற்கு பின்னாலூள்ள கண்ணீர்கதைகளையும் இரத்தம் தோய்ந்த வரலாறையும் பதிவு செய்கிறது இந்நூல்.
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதற்கும் இதே வர்த்தகப்போட்டியே காரணமாகும்.ஜப்பானிய தொழில் வளர்ச்சி வர்த்தக அபிவிருத்தி என்பன ரேநடியான அமெரிக்hவைப் பாதித்ததே காரணமாகும்.குறைந்தது 50 வருடங்களிற்காவது ஜப்பான் இனி எழுந்திருக்காது என்று நினைத்தது அமெரிக்கா.அதனால்தான் ஜப்பான் மீது அணுகுண்டு விசப்பட்டது என்பதை விளக்குகிறார் நூலாசிரியர்.
எப்போதும் அமெரிக்காவில் பொதுவான விடயமாக இருப்பது யார் ஜனாதிபதியாக வந்தாலும் ஆட்சிமுறை ஒரே மாதிரித்தான் இருக்கும்.அதாவது உள்நாட்டு மக்களிற்கு எந்த துன்பமும் தராமல் சந்தோசமாக வைத்துக் கொள்வது.அவர்களின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது,அவர்கள் விரும்புகிற விடயங்களை செய்து கொடுப்பது,அதே வேளை வெளிநாட்டு விவகாரங்களில் அதே கணித ஆசிரியர் வேலையைக் கடைப்பிடிப்பது என்கிறார் இராகவன்.இதற்கான காரணத்தையும் அவரே முன்மொழிகிறார் அதாவது அமெரிக்கர்களிற்கு தம் அரசு எப்போதும் தேவர்களால் நியமிக்கப்பட்டது போலவும் பிற தேசங்கள் சாத்தானால் நியமிக்கப்பட்ட அரசாகவும் ஒருங்கே காட்சியளிப்பதூன் என்று காரணத்தையும் அவரே கூறி விடுகிறார்.
எம் பொதுவான மனநிலை என்பது அமெரிக்காவிற்கு இஸ்லாமிய தேசங்களைப் பிடிக்காது என்று.அப்படித்தான் நாம் நினைத்திருப்போம். மேலோட்டமானப் பார்த்தால் அப்படித்தான் தெரியும். ஆனால் அது உண்மையிலலை என்கிறார் நூலாசிரியர்.இஸ்லாமிய தேசங்களின் மீதான அமெரிக்காவின் நடவடிக்கைளிற்கு பொருளாதாரக் காரணங்கள்தான் உண்டே தவிர, முஸ்லிம்களை அமெரிக்காவிற்கு பிடிக்காது என்பதல்ல, அமெரிக்கா தனது வரலாறெங்கும் சாதி,மத,இன ரீதியில் யாரையும் பிரித்துப் பார்த்ததில்லை.அதன் பார்வை ஒன்றுதான் பணக்காரர்கள்-ஏழைகள்,பலம் பொருந்தியவர்கள்-பலவீனமானவர்கள் என்று காரணத்தை தெளிவாக எமக்கு விளக்குகிறார்.
நீங்கள் அமெரிக்காவைப் புரிந்து கொள்ள தெரிந்து கொள்ள விரும்பினால் இப்புத்தகத்தை ஒருமுறை படியுங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள்.
வரலாறு தொடர்பாக ஆர்வமுள்ளவர்களிற்கும் பொதுவான தகவல்களைத் தேடித் தேடி வாசிப்பவர்களிற்கும் விருந்தாக அமையும் டாலர்தேசம். அனைவருக்கும் ஏற்ற புத்தகம்.வாசிப்போம்.
டாலர் தேசம் |
Post a Comment