.

உலகிலேயே மிகப்பெரிய இன அழிப்புகள் பல நடந்திருக்கின்றன.. ஆனாலும் பலரால் நினைவூட்டப் படுவது ஹிட்லரால் யூதர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளே… . ஹோலோகோஸ்ட் என சுருக்கமாக அழைக்கப்படுகிறன இப்படுகொலைகள்.

யூதர்கள் மீது ஹிட்லருக்கு அப்படி என்ன வெறுப்பு? ஜேர்மன் மக்களும் இதை எப்படி எதிர்க்காமல் இருந்தார்கள்?வாருங்கள் பார்க்கலாம்.

நாடற்ற நாடோடிகள்:

ஆதாம் ஏவாளின் பத்தாவது தலைமுறை என்று கூறப்படும் ஆப்ரஹாமின் வாரிசுகளே இந்த யூதர்கள். பழைய ஏற்பாடு இவர்களிடமிருந்தே ஆரம்பிக்கிறது. கானான் என்று பைபிளில் கூறப்படும் தற்போதைய லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் பரவியிருந்தனர்.

பரவி பெருகிய யூதர்கள்:

யூதகுடிகள் தங்களது சொந்த பூமியிலிருந்து ஜெருசலேம் என்ற ஒற்றை காரணத்தால் நடைபெற்ற பல்வேறு போர்களின் மூலம் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டதால், தப்பிப் பிழைக்க உலகெங்கும் ஓடினார்கள்.கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசத்தோர் கடைசியில் நாடின்றி அனாதையாகிப்போனது காலத்தின் கொடுமை.

இருப்பவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு ஊரெல்லாம் என்கிற மாதிரி தென்பட்ட இடங்களில் எல்லாம்.. அதாவது அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் என கும்பல் கும்பலாக பரவி பெருக ஆரம்பித்தார்கள்.

யூத வெறுப்பு

கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு யூதர்க்கு சென்ற விடமெல்லாம் வெறுப்பு.. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. உலகிலேயே மிகப்பெரிய சுயநலவாதிகள் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு யூதர்கள் எனலாம். தன் வீடு. தன் குடும்பம், தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு?? ( அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்)..அவ்வளவுதான்..உலகில் முதல் முறையாக லஞ்சம் என்ற ஒன்றை நடைமுறை படுத்தியவர்கள் இவர்கள் என்று சத்தியம் செய்யலாம்.. எல்லாம் புது இடங்கள்.. இடையூறின்றி வாழ வேண்டும் என்றால் , யார் யாருக்கு என்னென்ன கொடுக்க வேண்டும் என யோசித்து யோசித்து பணத்தை வீசி, தங்களுக்கு தேவையானவற்றை சாதித்து கொண்டார்கள். மூல தொழில் வட்டிக்கு கடன் கொடுத்தல்.

கந்து வட்டி கூட இவர்கள் தான் கண்டு பிடித்திருக்கக் கூடும். இவர்களிடம் கடன் வாங்காத அடித்தட்டு மக்களே இல்லை எனலாம். சாதா வட்டி, மீட்டர் வட்டி, வட்டிக்கு வட்டி என பணம் சேர்த்து, தொழில்கள் தொடங்கி, வியாபாரம், பள்ளிகள், தொழிற்சாலைகள், அரசியல் என ஊசி நுழையாத இடங்களில் எல்லாம் யூதர்கள் நுழைந்து கோலோச்சினர்..

தேவையான அனைத்தையும் பணம் கொடுத்து சாதித்து கொண்டனர். சொந்த நாட்டு குடிமக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எல்லாம் இவர்களுக்கு பிராப்தமானது.. ஒரு கட்டத்தில் அரசின் முடிவுகளில் தலையிடும் அளவுக்கு செல்வாக்கு உள்ளவர்களாக மாறித்தான் போனார்கள்.  ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரி யை விரட்டிய கதையாகிப்போனது நிஜம்..எனவே அனைத்து மக்களுக்கும் யூத வெறுப்பு அதிகமாகவே இருந்தது. "இவர்களையெல்லாம் ஒழித்தால் தான் நாம் வாழ முடியும் "

ஜேர்மனியின் ஹிட்லர்:

சாதாரண ராணுவ வீரராக இருந்து, ஜேர்மனியின் சர்வாதிகாரியாக மாறிய ஹிட்லருக்கு சிறுவயதிலேயே யூத வெறுப்பு மனதில் வேரூன்றி இருந்தது. அவரைச் சுற்றியிருந்த பல நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவரும் யூதர்களின் அநியாய வட்டியால் புலம்பிக் கொண்டிருந்ததையும்,  அனைத்து இடங்களிலும் அவர்களது நடத்தையும் இவர் மனதை விஷ விதையை ஊன்றியிருந்தது. ஆட்சியில் அமர்ந்ததும் யூதர்களை தனது நாட்டிலிருந்து வெளியேற்றுவதில் குறியாய் இருந்தார்.

1919 ல் தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக இருந்த ஹிட்லர், கட்சி உறுப்பினர்களிடையே, யூதர்கள் இல்லாத ஜேர்மனியை உருவாக்குவது மட்டுமே, இழந்த ஜேர்மனியின் புகழ், தொன்மை, இனத்தூய்மை ,கலாச்சாரம் என அத்துனையையும் மீட்டெடுக்க முடியும் என பேசுவார்..நாளாக நாளாக மக்கள் ஹிட்லரது வசீகரப் பேச்சால் கட்டுண்டு,  திரள் திரளாக கூடி,  மணிக்கணக்கில் அவரது பேச்சை கேட்டு , அவரது கருத்துக்களை உள்வாங்க ஆரம்பித்தனர். சொல்வது சரி தான்.இங்குள்ள வேலையில்லா திண்டாட்டம்,  வறுமை, விலைவாசி உயர்வுக்கு காரணம் இவர்களே. யூதர்களை அப்புறப்படுத்தி விட்டால் ஜேர்மனிக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்கும்.

யூதர்கள் யாரும் வைத்தியராகவோ,சட்டத்தரணியாகவோ,கடை வைத்தோ,தொழிலோ வேறு எது செய்தும் பிழைப்பு நடத்தக்கூடாது.ஜேர்மனியின் கொடி பயன்படுத்தக்கூடாது.. வாக்குரிமை கிடையாது.மொத்தத்தில் தீண்டத்தகாதோர் யூதர்கள். அவர்களை அனைத்திலும் புறக்கணிக்க வேண்டும். அரசாங்கத்தில் பணியிலிருக்கும் அனைவரும் நீக்கப்படுகிறார்கள்.

இராணுவத்தில் யூதர்கள் கூடவே கூடாது. ஒவ்வொருவரின் நதிமூலம் ரிஷிமூலம் ஆராயப்பட்டது. அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா, எள்ளு தாத்தா அனைவரும் ஜேர்மனியர்களா?என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இல்லையா கொல்வதற்குள் ஓடிப்போய்விடு.

யூதர்கள் அடைக்கப்பட்ட அறை

நாஜிக்கள் கணக்கெடுப்பில் இருந்து யாரும் தப்பவில்லை. இதை கேள்விப்பட்ட மற்ற நாடுகள் யூதர்கள் எங்கே வந்துவிடப் போகிறார்களோ என்று பயந்து அனைத்து வழிகளையும் மூடினர். தினமும் யூதர்கள் குறித்து ஏதோ ஒரு கட்டுப்பாடு வந்து கொண்டிருந்தது. செய்வதறியாது தவித்த யூதர்களை வைத்து சோறு போட்டு போஷிக்க முடியுமா என்ன?

எங்காவது ஒதுக்குப் புறமாக இடிந்த தொழிற்சாலைகள், பெரிய கட்டிடங்கள் (முதல் உலகப்போரில் சிதிலமடைந்தவை) தேர்ந்தெடுக்கப்பட்டு, காற்று, வெளிச்சம் இல்லாத கட்டிடங்களில் அடைக்கப்பட்டனர். சன்னல்கள் உயரமான இடத்தில் இரண்டு மட்டும்.மற்றவை அடைக்கப்பட்டன.

பெயர் விபரம் எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் ஆயிரக்கணக்கானோர் கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். சிறிதளவு உணவு. கடுமையான வேலை.. யூதர்களின் ஒரு வழிப்பாதையாகிப் போனது. இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்ததும் ஹிட்லர் பிடித்த நாடுகளில் உள்ள யூதர்கள் வேறு லட்சக்கணக்கானோர்..

நாள் ஆக ஆக இவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே..இனி ஒன்றும் சமாளிக்க முடியாது.. கொன்று விட வேண்டியது தான்.. ஒவ்வொரு யூதனாக என்று கொன்று முடிப்பது? வளர்ந்து கொண்டே இருக்கிறார்களே.. அதோடு போர் நடக்கும் நேரத்தில் இவர்களுக்காக லட்சக்கணக்கில் துப்பாக்கி குண்டுகளை வீணாக்குவது முட்டாள்தனம்..

மொத்தமாக கொன்று குவிக்க பல்வேறு வழிமுறைகள். மொத்தமாக அடைத்து விஷப்புகையை செலுத்தி கொல்வது.. கணக்கு வேண்டும் அல்லவா? பிடித்த யூதர்கள் கைகளில் இரும்பு வளையம் மாட்டப்பட்டது.. மொத்தமாக பிணங்களை எரித்தால் சாம்பலில் இருந்து கிடைக்கும் இரும்பு வளையங்களை எண்ணிக் கொள்ளலாம்.. கணக்கே கிடையாது.

ஆண்கள் பெண்கள் குழந்தைகள் வயதானோர்..யாராயிருந்தால் என்ன? நீ யூதனாதலால் வாழத்தகுதியில்லாதவன்..மருத்துவ ஆராய்ச்சிக்கு யூதர்களை உயிருடனோ, பிணமாகவோ பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்களை எப்படி வேண்டுமானாலும்.. மொத்தத்தில் யூதர்கள் குவிந்து விடாதபடி, தினமும் அப்புறப்படுத்தப்பட்டனர். பிணங்களை எரிக்கும் இடங்களில் இருந்த சிம்னிகளிலிருந்து , உடல்கள் தீயும் நெடியுடன் கலந்த புகை இரவு பகலாக வெளியேறிக்கொண்டிருந்தது..

ஹிட்லரின் நடவடிக்கைகள் குறித்து பிற நாடுகளின் கண்டனங்கள் ஆரம்பிக்கும் போதே.. ஊடகங்கள் அனைத்துக்கும் தடை..வெளி உலகிற்கு எதுவும் தெரியாதபடி பார்த்துக் கொள்ளப்பட்டது. பொதுவாக அழைத்துச் செல்லப்படும் யூதர்களுக்கே என்ன நடக்கிறது என்பது தெரியாது.. மக்களுக்கும் தெரியாது. தெரிந்தாலும் ஹிட்லரின் நாஜிப்படையை எதிர்ப்பதோ.. நடக்கும் விஷயங்களை எதிர்ப்பதோ இயலாது.. எதிர்த்தால் நீங்களும் அதே முகாமில்தான் …

இவ்விடங்களில் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களும் வெளியே வர இயலாது.. கிட்டத்தட்ட அறுபது லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டதாக தெரிகிறது.. அதற்கு மேலும் இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனி தோற்று, நேச நாட்டுப்படைகள் உள்ளே நுழைந்த பின்பே அனைத்து அவலங்களும் ..காப்பாற்றப்பட்ட யூதர்கள் மூலமாகவும், மற்றும் சில கைதிகள் மூலமாகவும் தெரிய வந்தது.



Post a Comment

Previous Post Next Post