.

கழிவறை இருக்கை.ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.பாலியல் சார்ந்த கண்ணோட்டத்தினை பெண்களின் பார்வையிலிருந்து வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர்.

ஆண்கள் தங்களின் விந்துவைக் கழிப்பதற்குரிய ஒரு கழிப்பறையாக யோனித் துவாரத்தினை பயன்படுத்த வேண்டாம் என்பதை முகத்திலடித்தால் போல் முன் வைக்கிறது இந்நூல்.

காமம் என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானது.அதை ஆண்கள் மட்டும் சொந்தம் கொண்டாட பெண்கள் போகப் பொருளாக பாவிக்கப்படுகிறனர்.70% பெண்கள் உடலுறவில் தாங்கள் உச்சம் என்பதை அனுபவிப்பதில்லை என்பதை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.

பெண்ணின் யோனித்துவாரமானது ஆண்கள் தமது விந்துவைக் கழிக்க அமரும் கழிவறை இருக்கையாக உபயோகப்படுகிது என்கிறார் நூலாசிரியர்.பெண்களின் உடலில் யோனித்துவாரம் மட்டுமே தேவையென்றால் மற்றைய பாகங்கள் எதற்காக..? வெறும் துவாரம் மட்டுமே ஆண்களின் திருப்திக்கு போதுமென்றால் ஏனைய பாகங்களை ஏன் இரசிப்பான் கொண்டாடுவான் என கேள்வி கேட்கிறார்.

நாம் காமம் என்ற ஒன்றை மறைத்து வைக்க¸அதை ஓர் அவதூறுச் சொல்லாக பயன்படுத்த பிள்ளைகளிற்கு அதன் மேலான ஆர்வம் அதிகரிக்கறது.அதைத் தேடியோ¸இல்லை புரிதலைத் தேடியோ வெளியில் செல்லும் போது பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். எனவே காமம் என்ற ஒன்றை மறைக்கத் தேவையில்லை அதை வெளிப்படையாகவே சமூகத்தால் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்பது நூலாசிரியரின் வாதம்.காமம் என்ற ஒன்று இல்லையேல் நானோ¸நீங்களோ இந்தப் பதிவை வாசிக்கும் இன்னொருவரோ பிறந்திருக்கப் போவதில்லை.

பெண்களிற்கு கற்பு என்ற ஒன்றைத் திணித்து அவர்களின் காம உணர்வுகளை ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறோம்.காமம் தொடர்பாக பெண்கள் பேசவே கூடாது என்ற சமூதாய நிலை. அதையும் தாண்டி பேசினால் அவளின் நடத்தையை குறை கூறுதல் வழக்கமாகிறது.கருத்தை கருத்தால் எதிர் கொள்ளமல் அவளின் ஒழுக்கத்தை கேள்வி கேட்கும் சமுதாய நிலையே என்னவென்று சொல்வது..? இந்நூலில் நூலாசிரியர் தன்னுடைய சொந்த அனுபவத்தையே பகிர்ந்துள்ளார்.அதாவது அவருடைய நண்பருக்கும் அவருக்கும் இடையிலான உரையாலின் போது காமம் குறித்து பேசிய பின்னர் அன்றிரவு அவருக்கு தொலைபேசியில் அழைத்து படுக்கைக்கு வருகிறாயா..? என்றழைக்குமளவிற்கு இருக்கிறது ஆண்களின் மனநிலை.இந்த மனநிலை மாற வேண்டும்.காமம் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒன்று.அதில் ஆண் பெண் வித்தியாசம் கிடையாது.காமம் அனுபவிக்க பெண்கள் வேண்டும் ஆனால் பெண்கள் காமத்தைப் பற்றி பேசினால் தவறு என்ன நியாயம் இது?

என்னதான் நாம் புத்தகங்கள் எழுதினாலும் பல காலமாக நம் சமூகம் ஆணாதிக்க சமூகமாகவே இருநது வந்துள்ளது.பெண்கள்தான் அதிகமாக அடிமைப்பட்டு வாழ்கிறார்கள் என்னும் உண்மையை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.ஆனால் இப் புத்தகதமானது இருபாலாரையும் பொதுவில் வைத்தே அலசியுள்ளது.வாசிப்பவர்களும் நடுநிலையிலிருந்து வாசிப்பது பொருத்தமாக இருக்கும்.

ஒரு பெண்ணின் துவாரம் மட்டுமேஒரு ஆணுக்கு அனுபவிக்க போதுமெனின் எதற்காக பெண்ணின் உடலின் வனப்பைத் தேட வேண்டும்.எப்படி இருந்தாலும் அவளை முழுமையாக அனுபவிக்காமல் அவளுக்கும் அந்த இன்பத்தை தராமல் இருக்கப் போகும் பட்சத்தில் அவளின் உடலின் எந்தப்பாகம் எப்படி இருந்தால் என்ன?என்ன மாற்றம் நிகழந்து விடப் போகிறது?பெண்ணின் புறத் தோற்றம் ஆணைக் கிளர்ச்சி கொள்ள வைக்கும் சாதனம் மட்டுமே.கிளர்ச்சி ஏற்பட்ட பின் அவளைப்பற்றி துளியேனும் கவலை கொள்வதில்லை.அவளும் தொடுதல்களிற்கு ரசனைக்கு அன்பான வார்த்தைகளிற்கு ஏங்குகிறாள் என்பதை வசதியாக மறந்து போய் விடுகிறான்.இங்கு பெண்ணிற்கு கிடைப்பதெல்லாம் தன் துவாரத்தில் நுழைக்கப்படும் அவனின் உறுப்பின் இரண்டு அல்லது மூன்று நிமிட இருத்தல் மட்டுமே.இப்படி ஒரு கூடலை யார்தான் விரும்புவர்...?எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்வர்..?காலம் முழுவதும் அவள் தன்னை மகிழ்வாக ஒப்புவிக்க அவளைப் புரிந்து கொள்ளுங்கள்.

மாதவிடாய் நிறுத்தத்திற்குப் பின்னர் பெண்களிற்கு காம உணர்வு தோன்றவே தோன்றாது என்னும் கருத்தை பொய்யென எடுத்துரைக்கிறார் நூலாசிரியர்.கற்பு என்னும் போர்வையைப் போர்த்தி பெண்ணின் இயற்கை உணர்வுகளை அடக்கி வைக்க கற்றுக் கொடுத்தது போல் வயதைக் காட்டியும் அவளின் உணர்வுகளைக் கொலை செய்து விடும் முயற்சி என்று சாடுகிறார். மொனோபஸ் பற்றி கணவனோ காதலனோ புரிந்து கொள்ள வேண்டும்.ஆனால் எம் சமூதாய ஆண்களிற்கு அதைப் பற்றி எந்த ஆர்வமோ புரிதலோ இல்லை.

இப் புத்தகத்தில் இடம்பெறும் வாசகமொன்று என்னை மிகவும் கவர்ந்தது.அவ் வாசகம் கலவி கொள்ளும் போது நீ சிரிக்கவில்லையாயின் தவறான மனிதருடன் உறவு கொள்கிறாய் என்பதே அர்த்தமாகும்.,இதைவிட இன்னும் சில ''நாம் காமத்தைப் பற்றி மிக அதிகமாக சிந்திப்பதில்லை¸அதைப் பற்றி மிகத் தவறாகவே சிந்திக்கிறோம்". 'நட்பை அடித்தளமாக கொள்ளாத எந்தக் காதலும் மணல் மேல் எழுப்பிய மாளிகை போன்றது".'சுய இன்பம் கொள்வதைக் கடவுள் திட்டமிடாது இருந்திருந்தால்¸அவர் நம் கரங்களின் நீளத்தைக் குறைவாக அமைத் திருப்பார்¸"'உடலுறவின் அத்தனை முறைகளிலும்¸பெண்கள் பெரும்பான்மையான நேரங்களில் உச்சத்தை அடைவது சுய இன்பத்தின் மூலமே".இது போன்ற ஏராளமான வசனங்கள் என்னைக் கவர்ந்துள்ளன.

காமம் தொடர்பான மனத்தடைகளை சமூகத்தில் பொதிந்துள்ள மூட நம்பிக்கைகளை நீக்குவதே இந்நூலின் நோக்கமாகும்.அனைவரும் வாசிக்க வேண்டிய தேவையான புத்தகமாகும்.


கழிவறை இருக்கை



கழிவறை இருக்கை புத்தகத்தினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

You have to wait 45 seconds.

Generating Download Link...

Post a Comment

Previous Post Next Post